posted 5th October 2021
தனியார் வாகனத்தை ஓட்டிவிட்டு சாலையில் மாத வருமானம் எடுக்கும் ஊழியர் ஒருவரை சாலையை விட்டு அகற்ற வேண்டும் என கூறி இ.போ.சபை பருத்தித்துறை சாலையின் ஊழியர்கள் சிலர் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பருத்தித்துறை சாலையில் கடமை புரியும் ஊழியர் ஒருவர் தனியார் வாகனங்கள் ஓடுவதாகவும் சாலையிலிருந்து மாத வருமானத்தை பெற்று வருவதாகவும் அவர் ஊழியர்களின் நலனையோ, சாலையின் முன்னேற்றத்திலோ பங்கு கொள்ளாமல் செயற்படுகின்றார் எனக் குற்றம் சுமத்திய கவனயீர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் சுலோக அட்டைகளையும் தாங்கியிருந்ததுடன் அவரை இந்த சாலையை விட்டு அகற்ற வேண்டும் எனவும் கூறி நேற்று செவ்வாய்க்கிழமை(05) முற்பகல் சாலை ஊழியர்கள் சிலர் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
எஸ் தில்லைநாதன்