
posted 22nd October 2021
மன்னாரில் 21.10.2021 அன்று மேலும் 05 பேருக்கு கொரோன தொற்று நோய் பீடித்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் இம் மாவட்டத்தில் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 2280 ஆக உயர்ந்துள்ளது.
மன்னாரில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில்;
மன்னார் பொது வைத்தியசாலையில் 02 பேரும்
பெரிய பண்டிவிரிச்சான் மாவட்ட வைத்தியசாலையில் 02 நபர்களும்
வங்காலை மாவட்ட வைத்திசாலையில் ஒருவருமாக
இத் தொற்றாளர்களாக பதிவாகியுள்ளனர்.
இதைத் தொடர்ந்து இந்த மாதம் (ஒக்டோபர்) 21 ந் திகதி வரை 160 நபர்கள் கொவிட் தொற்றாளர்களாக இனம் காணப்பட்டுள்ளதுடன் மன்னார்ல் கொவிட் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 2280 ஆக உயர்ந்தள்ளது.
இதுவரைக்கும் இம் மாவட்டத்தில் 29,263 பேருக்கு பி.சீ.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மன்னாரில் முதலாவது கொவிட் தடுப்பூசிகள் 80,480ம், இரண்டாவது தடுப்பூசிகள் 69,457 நபர்களுக்கும் எற்றப்பட்டுள்ளதுடன் பாடசாலை மாணவர்களுக்கு 866 பேருக்கும் இதுவரை இவ் தடுப்பூசிகள் எற்றப்பட்டுள்ளதாக மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் த.வினோதன் தனது நாளாந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

வாஸ் கூஞ்ஞ