
posted 5th October 2021
இந்த மாதம் (ஐப்பசி) திகதி 1 தொடக்கம் 3 வரை கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 18 என்று மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் த.வினோதனின் நாளாந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார். இவ்வெண்ணிக்கையில், 3 பேர் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் உறுதி செய்யப்பட்டவராவர்.
எனவே இதுவரை மன்னார் மாவட்டத்தில் செய்யப்பட்ட 28, 990 பி.சீ.ஆர். பரிசோதனைகளில் 2138 கொரோனா தொற்றாளர்கள் என உறுதி செய்யப்பட்டுள்ளனர்.
முதலாவது கொரோனா தடுப்பூசி 78,601 பேருக்கும், இரண்டாவது தடுப்பூசி 59,762 பேருக்கும் கொடுக்கப்பட்டுள்ளதாக பணிப்பாளரின் அறிக்கையில் இருந்து தெரியவருகின்றது.

வாஸ் கூஞ்ஞ