
posted 29th October 2021
மன்னாரில் புதன் கிழமை (27.10.2021) மேலும் ஒன்பது நபர்கள் கொரோனா தொற்றாளர்கள் என உறுதி செய்யப்பட்டுள்ளதாக மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரின் நாளாந்த அறிக்கையில் பதிவாகியுள்ளது.
மன்னார் மாவட்டத்தில் வைத்தியசாலைகளில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். மற்றும் அன்ரிஜன் பரிசோதனைகளில் ஒன்பது நபர்கள் கொரோனா தொற்றாளர்கள் என உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவர்களில் மன்னார் பொது வைத்தியசாலையில் 04 நபர்களும், அடம்பன் மற்றும் பெரிய பண்டிவிரிச்சான் மாவட்ட வைத்தியசாலைகளில் தலா 02 நபர்களும், தலைமன்னார் மாவட்ட வைத்தியசாலையில் ஒருவரும் மொத்தம் 09 நபர்களே கொரோனா தொற்றாளர்களாக இனம் காணப்பட்டவர்கள் ஆவர்.
இதுவரைக்கும் மன்னார் மாவட்டத்தில் மொத்தம் 2326 கொரோனா தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர்.
மன்னாரில் ஒக்டோபர் மாதம் 384 பி.சீ.ஆர் பரிசோதனைகளும், 2380 அன்ரிஜன் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டதில் 206 நபர்கள் கொரோனா தொற்றாளர்கள் என பதிவாகியுள்ளனர்
அத்துடன் கொவிட் முதலாவது தடுப்பூசி 80,750 பேருக்கும், இரண்டாவது தடுப்பூசி 73,220 நபர்களுக்கும். பாடசாலை மாணவர்களுக்கு 2125 பேருக்கும் மற்றும் குறிப்பிட்ட வயதுடைய பாடசாலைக்கு செல்லாதவர்களுக்கு 311 நபர்களுக்கும் இத் தடுப்பூசிகள் எற்றப்பட்டுள்ளன என மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் த.வினோதன் தனது நாளாந்த கொரோனா தொடர்பான அறிக்கையில் 27.10.2021 அன்றைய நிலவரம் தொடர்பாக இவ்வாறு தெரிவித்துள்ளார்.

வாஸ் கூஞ்ஞ