
posted 10th October 2021
யாழ்ப்பாணத்தில் உயிரிழந்த வயோதிபப் பெண் ஒருவருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
யாழ்.போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் இன்று ஞாயிற்றுக் கிழமைமேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் குறித்த பெண்ணுக்கு தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
மூத்ததம்பி வீதி, மானிப்பாய் என்ற முகவரியைச் சேர்ந்த 85 வயதுடைய சின்னத்துரை பரிமளம் என்ற வயோதிபப் பெண்ணே உயிரிழந்த நிலையில் அவருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எஸ் தில்லைநாதன்