கோவிட் தொற்றும் மரணமும் அப்டேற் (07/10/2021) - யாழ்ப்பாணம்

யாழ்ப்பாணத்தில் உயிரிழந்த இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

யாழ்.போதனா வைத்தியசாலையில் நேற்று மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் குறித்த நபர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருந்தமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர்களில் ஒருவர் 19 வயதுடைய இளம் பெண் என்று மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனிவான் வீதி, சுழிபுரம் என்ற பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய இளம் பெண்ணே உயிரிழந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியாசலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அதேபோல, உயிரிழந்த நிலையில் அடையாளப்படுத்தப்படாத நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்ட ஆண் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


பிந்திய இணைப்பு

யாழ்ப்பாணம் தென்மராட்சிப் பிரதேசத்தினைச் சேர்ந்த மேலும் 11 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

பிசிஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனைகள் மூலம் குறித்த தொற்றாளர்கள் இன்று வியாழக்கிழமை அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதாரத் தரப்பினர் தெரிவித்தனர்.

அவர்களில் 08 பேர் அன்டிஜன் பரிசோதனை ஊடாகவும் 03 பேர் பிசிஆர் பரிசோதனை ஊடாகவும் அடையாளம் காணப்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டவர்களில் இருவர் கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் பொலிஸார் என்று தெரியவந்துள்ளது.

கோவிட் தொற்றும் மரணமும் அப்டேற் (07/10/2021) - யாழ்ப்பாணம்

எஸ் தில்லைநாதன்