
posted 2nd October 2021

அரசாங்க அதிபர் திருமதி ஸ்ரான்லி டீமெல்
கொரோனா தொற்று நோயின் கொடூரங்களின் மத்தியிலும், பல விதமான இன்னல்கள் இடையூறுகளிலும், போதித கல்வி ஆதாரங்கள் அற்ற நிலையிலும் எம் மன்னார் மாவட்ட மாணவர்கள் வட மாகாணத்தில் 1வது இடத்திலும், தேசிய ரீதியாக 11ஆவது இடத்திலும் உயர்ந்து நிற்பதற்கு அவர்களின் திறமையும், விடாமுயற்சியும், அத்துடன் கல்வி திணைக்களம் முன்னெடுத்த நடவடிக்கையின் பலனாகவும் கிடைத்த இவ்வெற்றி நிட்சயமாகப் பாராட்டப்பட வேண்டியதொன்றாகும் வேண்டியதொன்றாகும் என மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஸ்ரான்லி டீமெல் பெருமிதம் கொண்டார்.
இது தொடர்பாக அரசாங்க அதிபர் திருமதி ஸ்ரான்லி டீமெல் கருத்து தெரிவிக்கையில்;
கடந்த 2020 ஆம் ஆண்டு, மன்னார் மாவட்டத்தில் கொரோனா சூழ்நிலை காரணமாக உரிய கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகள் நடைபெறாத நிலையிலும், கல்வி திணைக்களம் மேற்கொண்ட நடவடிக்கையின் பயனாக இணையம் மூலமாகவும், செயலட்டை மூலமாகவும், தொடர்ச்சியாக மாணவர்களுக்கான கற்பித்தல் நடவடிக்கைகளை மேற்கொண்டதன் பலனையே நாம் கண்கூடக் காண்கின்றோம்
தற்போது கல்வித் துறையில் பல்வேறுபட்ட பிரிவுகள் இருப்பதால் மாணவர்கள் அவரவர் தகைமைக்குரியவாறு தெரிவு செய்யக்கூடிய வகையில் கல்விப்பிரிவுகள் உள்ளதால் மாணவர்கள் தங்கள் கூடிய கவனத்தைச் செலுத்தி க.பொ.த. உயர்தரத்திலும் இவ்வாறான சாதனைகளை நிலைநாட்ட வேண்டும் எனவும், மேலும் எங்களுடைய எமது இளைய சமூகம் கல்வியிலும் ஒழுக்கத்திலும் சிறந்து உருவாக வேண்டும் என்று ஆசி கூறுவதுடன் மாணவ மாணவியரின் கற்றல் செயற்பாட்டிற்கு உறுதுணையாக இருந்த மன்னார் மற்றும் மடு இரண்டு வலயக் கல்விப் பணிப்பாளர்கள் ஆசிரியர் ஆலோசனை சபை அதிபர்கள் மற்றும் மாணவர்களின் கற்றல் செயற்பாட்டிற்கு உதவி வழங்கிய அரசசார்பற்ற நிறுவனங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கின்றேன் என்றார்.

வாஸ் கூஞ்ஞ