
posted 27th October 2021
ஊடக அறிக்கை
அக்டோபர் 27, 2021
நேற்றைய தினம் (26-10-2021) தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் பிரான்ஸ் இன் இலங்கைக்கான தூதருக்கும் இடையேயான சந்திப்பொன்று பிரெஞ்சு தூதரின் இல்லத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் தலைவர் திரு.இரா.சம்பந்தன் அவர்கள், பேச்சாளர் திரு.ம.ஆ.சுமந்திரன், திரு.செல்வம் அடைக்கலநாதன் மற்றும் திரு.இராசமாணிக்கம் சாணக்கியன் அவர்களும் பங்குபற்றியிருந்தனர்.
இச்சந்திப்பின் போது ஜெனீவா மனித உரிமை பேரவையின் கூட்டத்தொடர், புதிய அரசியலமைப்பு, தமிழர் பிரச்சினைகளுக்கான தீர்வு, ஐரோப்பிய ஒன்றியமும் பயங்கரவாத தடைசட்டமும், மற்றும் தற்போது நடைபெற்றுவருகின்ற சிங்கள குடியேற்றங்கள் தொடர்பான பல்வேறு விடயங்கள் கலந்துடையாடப்பட்டது.

எஸ் தில்லைநாதன்