
posted 15th October 2021
15.10.2021
ஊடக அறிக்கை
இழுவைப் படகுகளுக்கெதிரான போராட்டம்
எமது கடல் வளத்தையும் நீரியல் வளத்தையும் மிக மோசமாக அழிக்கும் இழுவைப்படகுகள், 2017ம் ஆண்டின் 11ம் இலக்க சட்டத்தின் கீழ் தடைசெய்யப்பட்டுள்ளன. ஆனாலும் கடற்றொழில், நீரியல் அதிகாரிகள் இத்தடையை அமுல்படுத்தாத காரணத்தினால் உள்ளூர், வெளிப்பிரதேச மற்றும் வெளிநாட்டு இழுவைப்படகுகள் தொடர்ச்சியாக எமது கடல் வளத்தை முற்றாக சூறையாடுகின்றன. இந்த நிலை தொடருமாக இருந்தால் அடுத்த தலைமுறைக்கே கடல் வளம் இல்லாது போய்விடும். இச்சட்டத்தை முறையாக அமுல்படுத்தக் கோரி எதிர்வரும் 17ம் திகதி ஞாயிற்றுக்கிழமை முல்லைத்தீவிலிருந்து பருத்தித் துறை வரை கடல் வழியான எதிர்ப்புப் பேரணியொன்று இடம்பெறும். இழுவைப்படகு தடைச்சட்டத்தை முறையாக அமுல்படுத்துமாறு கடற்தொழில் நீரியல்துறை அமைச்சரை கோருவதே இப்பேரணியின் நோக்கமாகும். அனைத்து மக்களும் இவ்வெதிர்ப்புப் பேரணிக்கு ஆதரவு நல்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
ம.ஆ.சுமந்திரன்
பாராளுமன்ற உறுப்பினர்

எஸ் தில்லைநாதன்