இலங்கையில் கோவிட் தொற்று அப்டேற் (16.10.2021)

இலங்கையில் மேலும் 649 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இதையடுத்து நாட்டில் இதுவரை அடையாளம் காணப்பட்ட கொரோனாத் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 5 இலட்சத்து 31 ஆயிரத்து 70 (5,31070)ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, மேலும் 347 பேர் கொரோனாத் தொற்றிலிருந்து நேற்று குணமடைந்துள்ளனர்.

இதற்கமைய நாட்டில் இதுவரை 4 இலட்சத்து 92 ஆயிரத்து 305 பேர் கொரோனாத் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.

கொரோனா தொற்றால் நேற்று சனிக்கிழமை மட்டும் நாட்டில் 23 பேர் உயிரிழந்தனர் என்று அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்தது.

இவ்வாறு உயிரிழந்தவர்களில் 17 ஆண்களும், 6 பெண்களும் அடங்குவர். இவர்களில், 30 தொடக்கம் 59 வயதுக்கு இடைப்பட்ட 5 பேரும், 60 வயதுக்கு மேற்பட்ட 18 பேரும் உயிரிழந்தனர்.

இதனால், நாட்டில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 13,472 ஆக உயர்வடைந்தமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவைச் சேர்ந்த 02 வயதுச் சிறுமி உட்பட வடக்கு மாகாணத்தில் நேற்று சனிக்கிழமை 27 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

யாழ்.போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 319 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் குறித்த தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

யாழ்.போதனா வைத்தியசாலையில் 06 பேர், சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் 02 பேர், சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 02 பேர், தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் ஒருவர், வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 12 பேர், வவுனியா மாவட்ட வைத்தியசாலையில் ஒருவர், முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் ஒருவர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இலங்கையில் கோவிட் தொற்று அப்டேற் (16.10.2021)

எஸ் தில்லைநாதன்