
posted 28th October 2021
இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 22 பேர் உயிரிழந்துள்ளனர்.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வெளியிட்ட அறிக்கையில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் அனைவரும் நேற்று புதன்கிழமை உயிரிழந்தவர்கள் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கமைய, நாட்டில் இதுவரை கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13,696 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, 30 வயதுக்கு உட்பட்ட பெண் ஒருவர் மாத்திரமே நேற்றைய தினம் (27) உயிரிழந்தார் எனவுமு், 30 - 59 வயதுக்கு இடைப்பட்ட 06 பேரும், 60 வயதுக்கு மேற்பட்ட 15 பேரும் உயிரிழந்தனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
30 - 59 வயதுக்கு இடைப்பட்டோரில் 3 ஆண்களும் 3 பெண்களும், 60 வயதுக்கு மேற்பட்டோரில் 6 ஆண்களும் 9 பெண்களும் அடங்குகின்றனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

எஸ் தில்லைநாதன்