
posted 31st October 2021
இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 19 பேர் உயிரிழந்துள்ளனர்.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வெளியிட்ட அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இவர்கள் அனைவரும் நேற்றைய தினம் (29) உயிரிழந்தவர்கள் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கமைய, நாட்டில் இதுவரை கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13,725 ஆக அதிகரித்துள்ளது.
இவர்களில் 30 - 59 வயதுக்கு இடைப்பட்ட 07 பேரும், 60 வயதுக்கு மேற்பட்ட 11 பேரும் அடங்குகின்றனர் என அரசாங்க தகவல் திணைக்களம் வௌியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
30 - 59 வயதுக்கு இடைப்பட்டோரில் 05 ஆண்களும் 02 பெண்களும், 60 வயதுக்கு மேற்பட்மோரில் 07 ஆண்களும் 05 பெண்களும் அடங்குகின்றனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டில் மேலும் 136 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அதன்படி, இன்று இதுவரை 564 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கமைய, நாட்டில் இதுவரை கொவிட் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 539,980 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, கொரோனா தொற்றில் இருந்து மேலும் 316 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 512,481 ஆக அதிகரித்துள்ளது.

எஸ் தில்லைநாதன்