இலங்கையின் கொரோனாத் தொற்றும் மரணமும் அப்டேற் (27.10.2021)

யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் புதன்கிழமை (27.10.2021) மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனை முடிவுகள் வெளியாகியுள்ளன.

யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வு கூடத்தில் புதன்கிழமை 66 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் ஐந்து பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் - 02 பேர்

யாழ். போதனா வைத்தியசாலையில் - ஒருவர்

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் - ஒருவர்

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் - ஒருவர்.

இலங்கையில் மேலும் 425 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கொரோனா தொற்றில் இருந்து மேலும் 373 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 504,376 ஆக அதிகரித்துள்ளது.

இலங்கையில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 20 பேர் உயிரிழந்துள்ளனர்.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் அனைவரும் நேற்று செவ்வாய்க்கிழமை உயிரிழந்தவர்கள் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது

இதற்கமைய, நாட்டில் இதுவரை கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13,674 ஆக அதிகரித்துள்ளது.

30 - 59 வயதுக்கு இடைப்பட்ட 8 பேரும், 60 வயதுக்கு மேற்பட்ட 12 பேரும் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

30 - 59 வயதுக்கு இடைப்பட்டோரில் 5 ஆண்களும் 3 பெண்களும், 60 வயதுக்கு மேற்பட்மோரில் 6 ஆண்களும் 6 பெண்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையின் கொரோனாத் தொற்றும் மரணமும் அப்டேற் (27.10.2021)

எஸ் தில்லைநாதன்