
posted 16th October 2021
இலங்கையில் மேலும் 20 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.
11 ஆண்களினதும், 9 பெண்களினதும் மரணங்கள் இவ்வாறு பதிவாகியுள்ளன.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தால் நேற்று
வெள்ளிக்கிழமை இந்த மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டன என்று அரச தகவல் திணைக்களம் இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, நாட்டில் இதுவரையில் கொரோனாத் தொற்றால் மரணித்தோரின் மொத்த எண்ணிக்கை 13 ஆயிரத்து 449 (13,449) ஆக உயர்வடைந்துள்ளது.
இதில் 30 வயதுக்கு உட்பட்ட பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
30 முதல் 59 வயதுக்கு இடைப்பட்ட 3 ஆண்களும் இரண்டு பெண்களுமாக 5 பேர் மரணித்துள்ளனர்.
இதேவேளை, 60 வயதுக்கு மேற்பட்ட 14 பேரின் உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. அவர்களில் 8 ஆண்களும், 6 பெண்களும் அடங்குகின்றனர்.

எஸ் தில்லைநாதன்