இறால் உற்பத்தியில் வீழ்ச்சி - பொருளாளர்

கிளிநொச்சி வன்னேரிக்குளம் இறால் வளர்ப்புக்கு ஏற்ற இடமாக இல்லாதிருப்பதால் இதற்கு பதிலாக மீன் குஞ்சுகளை வளர்ப்புக்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளுவது நலம் எனவும் இறால் வளர்ப்பில் ஏற்படும் பாதிப்பை கண்டறியப்பட வேண்டும் எனவும் வன்னேரிக்குளம் நன்னீர் மீன்பிடி சங்கத்தின் பொருளாளர் மெசிடோ நிறுவன இணைப்பாளரிடமும் கிளிநொச்சி மேலதிக அரசாங்க அதிபரிடமும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தேசிய நீர் உயிரியல் வள அதிகாராசபையினால் (நெக்டா) இனம் காணப்பட்ட வன்னேரிக்குளத்தில் கடந்த வெள்ளிக் கிழமை (29.10.2021) மீனவர்களின் வாழ்வாதாரத்திற்காகவும் நன்நீர் மீன்பிடியை ஊக்குவிப்பதற்காகவும் வன்னேரிக்குளத்தில் இறால் குஞ்சுகள் விடுவதற்காக மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் இணைப்பாளர் யட்சன் பிகிராடோ மற்றும் கிளிநொச்சி மேலதிக அரச அதிபரும் இக் குளத்தில் இறால் குஞ்சுகளை விடுவதற்கான நடவடிக்கையை மேற்கொண்டிருந்தார்.

அப்பொழுது வன்னேரிக்குளம் நன்னீர் மீன்பிடி சங்கத்தின் பொருளாளர் இது தொடர்பாக சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் இணைப்பாளர் யட்சன் பிகிராடோ மற்றும் கிளிநொச்சி மேலதிக அரச அதிபரிடம் கருத்து தெரிவிக்கையில்;

இக் குளமானது சேற்றுப் பாசி நிறைந்து காணப்படுவதால் இதில் மீன் குஞ்சுகள் வளரும் ஒரு பகுதியாக காணப்படுகின்றது. அத்துடன் இதற்குள் இறால் வளர்ச்சி குன்றிய நிலையிலேயே காணப்படுக்கின்றது.

இறால் குஞ்சுகளை குளத்தில் விடுவதால் மீன் உற்பத்தி குறைகிறது அத்தோடு இறாலின் மீது ஒருவிதமான பாசிகள் படர்ந்து தரமற்று காணப்படுவதால் எவரும் கொள்வனவு செய்ய முன்வருகிறார்கள் இல்லை எனவும், இந்த பிரச்சனைக்கு ஒரு தீர்வு காணும் வரை வன்னேரிகுளத்தில் இறால் குஞ்சுகளை விட வேண்டாமென்று வன்னேரிக்குளம் மீன்பிடி சங்கத்தின் பொருளாளர் இவ்வாறு அவர்களிடம் தெரிவித்தார்.

அத்துடன் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கும் போது;

வன்னேரிக்குளம் நன்னீர் மீன் பிடி தொழிலை நம்பி பல குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்த குளத்தில் இரண்டு தடவை இறால் குஞ்சுகள் விடுபட்டது முதல் முறை நல்ல நிலையில் இருந்தது. இரண்டாவது முறை இறால்களால் மீன் அழிவுகள் ஏற்பட்டு மீன் விளைச்சல் குறைந்துவிட்டது.

எம்மிடம் இறால் எடுப்பதற்காக வரும் வியாபாரிகள் எமது குளத்தில் உற்பத்தியாகும் இறால்கள் மீது ஒருவிதமான பாசி படர்ந்து தரம் இல்லாமல் இருப்பதாகக் கூறி 1200 ரூபாய்க்கு கொள்வனவு செய்த இறால் விலையை 400 ரூபாயாக குறைத்து விட்டார்கள்.

முறிப்புக் குளம் மற்றும் அக்கராயன் குளத்தில் உற்பத்தியாகும் இறால்களை எம்மிடம் கொண்டு வந்து காண்பித்தார்கள். உண்மையில் இறால்கள் மீது பாசி படர்ந்து காணப்படுகிறது

இதனால் எமது குளத்தில் மீன் உற்பத்தி பாரிய அளவு வீழ்ச்சி அடைந்து எமது வாழ்வாதாரம் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த இறாலின் மீது இவ்வாறு பாசிகள் படுகிறது என்பது தெரியவில்லை இந்த பிரச்சினைகள் தீரும் வரை எமது வன்னியர் இக்குளத்தில் இறால் குஞ்சுகள் விடுவதில்லை என்று எமது மீனவ சங்க கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டு அதனை தேசிய நீர் உயிரின வள அதிகார சபைக்கு (நெக்டா) அனுப்பி இருந்தோம்

எமது மீனவர்களின் வாழ்வாதாரத்திற்கு இந்த குளத்தில் சிலாப்பியா ரோ கட்லா போன்ற மீன் குஞ்சுகளை விடுவது பொருத்தமாக இருக்கும் என்று வன்னேரிக்குளம் நன்னீர் மீன்பிடி சங்கத்தின் பொருளாளர் தெரிவித்தார்

இறால் உற்பத்தியில் வீழ்ச்சி - பொருளாளர்

வாஸ் கூஞ்ஞ