
posted 18th November 2024
உறவுகளின் துயர் பகிர்வு - Share your bereavement
காஃபின் (caffeine) பற்றிய உண்மை. நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய நன்மைகள் மற்றும் அபாயங்கள்
கஃபெயினானது அனேகமானோரால் விரும்பப்பட்டு காலை வேளையிலேயே உலகலாவ ரீதியில் அருந்தப்படுகின்றது. அதற்குக் காணம்; இப்பானமானது ஒரு உற்சாகத்தினை தருவதற்காகவும், உடலின் சக்தியினை அதிகரிப்பதற்காகவும், ஒரு காரியத்தினில் உன்னிப்பான கவனத்தினை ஈர்ப்பதற்காகவும், உடற்சோர்வினை அல்லது அலுப்பினை குறைக்கவும் அல்லது அகற்றவும் அமைகின்றதென்று மனதினில் வேரூன்றியுள்ள நிலைமைதான்.
அத்துடன் கஃபெயினை அருந்துவதனால், நித்திரை கொள்ளாமல் விழித்திருந்து ஆற்ற வேண்டிய வேலைகளை திறமையாக ஆற்றுவதற்காகவும், மிகவும் வேலைப்பழு கூடிய வேளைகளிலும் காஃபினானது உயிரோட்டம் தரும் பானமாக உதயமாகியுள்ள வேளையிலே, கஃபெயினானது கணிசமான அளவில் நித்திரையிலும் தாக்கத்தினை ஏற்படுத்துகின்றது. எனவே, எவ்வாறு காஃபெயினானது உடலின் இயற்கையான செயல்முறைகளையும், விரும்பத்தகாத அளவு இடர்பாடுகளைகளையும் சமநிலைப்படுத்துகின்றது என்பதனை புரிந்தகொள்வது அவசியமாகின்றது. எனவே, காஃபெயினானது தூக்கத்தின் வடிவத்தில் உண்மையான தாக்கத்தினை உண்டாக்கின்றதா? என்பதனை இங்கு ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.
நித்திரை தொடங்குவதற்குத் தாமதம்: எமது உடலிலுள்ள அடினோசின் என்னும் ஹார்மோனானது நாம் நித்திரையினை ஒழுங்காகக் கொள்வதற்கு ஊக்கமளிக்கின்றது. ஆனால், காஃபெயினானது அடினோசின் ஹோமோனினின் செயல்பாட்டினைத் தடுப்பதனால் நித்திரை வருவதனைத் தாமதமாக்குகின்றது. இதனால், வழக்கம் போல நித்திரை கொள்வதற்கு கஷ்டமான நிலை ஏற்படுகின்றது.
நித்திரையின் நேரம் குறையும் - கஃபெயினினை நித்திரைக்குப் போவதற்கு கொஞ்சம் முன்பு அருந்தினால் நித்திரை கொள்ளும் நேர அளவினைக் குறைக்கும். ஆனால், எவ்வளவுதான் நித்திரை கொள்ள முயற்சி செய்தாலும் பூரணமான அளவு நித்திரையினால் பெறும் ஆறுதலைப் பெற முடாயாது.
மேலும், கஃயின் நித்திரையின் இயற்கையான கட்டமைப்பினை மாற்றும். அத்துடன் ஆழமான நித்திரையினைக் குறைக்கின்றது. இவ் ஆழமான நித்திரையின் பௌதீகக் கட்டமைப்பினதும், நினைவக் ஒருங்கிணைப்பிற்கும் மிகவும் முக்கியமானதாகும். அத்துடன், ஆர் ஈ எம் (Rapid Eye Movement) நித்திரையானது, உணர்வுபூர்வமான செயல்முறைக்கு முக்கியமாக இருக்கையில் அதனையும் சீர்குலைக்கின்றது.
அத்துடன், கஃயினைக் குடிப்பதானால் கணிசமான அளவில் நித்திரையாகப் போகும் நேரத்தினைக் கூட்டுகின்றது. அதாவது, விழிப்பிலிருந்த நேரம் தொடங்கி நித்திரையாகப் போகும் நேரம் வரையுள்ள காலத்தினை இது குறிக்கும். அத்துடன் இதனால் நித்திரையானது அடிக்கடி குழம்பும் நிலை ஏற்படும்.
இவ்வாறான அரைகுறை நித்திரையினால் மறுநாள் தூக்கத்தன்மை உருவாகுவதுடன் இந்நிலையினை மீண்டும் உருவாகுவதனைத் தடுப்பதற்காக மீண்டும் மீண்டும் கஃபெனை குடிக்கத் தோன்றும்.
மேலும், கஃபெயின் அரை-வாழ்நாளானது கிட்டத்தட்ட 4 தொடக்கம் 6 மணித்தியாலம் வரையாகும். அதனால், நித்திரைக்குப் போன பின்பும் கஃபெயினானது எமது உடலில் வேலை செய்து கொண்டிருக்கும்.
மரபணு வித்தியாசங்கள் ஒவ்வொருவருக்கும் வித்தியாசமானது. இதனால், அவர்களுக்கிடையிலுள்ள உடல் ஏற்பானது இந்த மரபணுவில் தங்கியுள்ளது.
கஃபெயினுடைய வெகுமதிமிக்கச் செயலானது விழிப்புணர்வையும், அவர்கள் மூலமான உற்பத்தித்திறனையும் அதிகரிக்கும் தன்மை கொண்டுள்ளதனால்மட்டும் கஃபெயினால் உருவாக்கப்படும் நித்திரையில் ஏற்படும் பாதிப்புக்களையும் அதனால் ஏற்படுத்தப்படும் விளைவுகளையும் தவிர்க்கவோ அல்லது கண்மூடித்தனமாக உதாசீனம் செய்ய முடியாது. எனவே, இவற்றினைத் தவிர்த்து கஃபெயினால் உவந்தளிக்கப்படும் நன்மைகளைப் பெற வேண்டுமானால் நித்திரைக்குப் போகும் முன்பு குடிப்பதனைத் தவிர்த்துக்கொள்வதனால் பெறமுடியும்.
The Truth About Caffeine: Benefits and Risks You Should Know
Caffeine is a widely consumed stimulant, celebrated for its ability to boost energy, improve focus, and fight fatigue. From your morning coffee to an afternoon energy drink, caffeine is deeply ingrained in daily routines worldwide. However, while its wakefulness-promoting properties can be a lifesaver during busy days, caffeine can also significantly impact your sleep. Understanding how it interacts with your body's natural processes is crucial to balance its benefits with the potential for disrupted rest. So, how exactly does caffeine affect our sleep patterns?
Delays Sleep Onset
Caffeine blocks adenosine, a neurotransmitter that promotes sleepiness. By inhibiting adenosine, caffeine keeps you alert and delays the onset of sleep, making it harder to fall asleep.
Reduces Sleep Duration
Consuming caffeine close to bedtime can shorten the total amount of sleep you get. This can lead to insufficient rest, even if you manage to fall asleep.
Disrupts Sleep Architecture
Caffeine can alter the natural structure of your sleep. It reduces the amount of deep sleep (slow-wave sleep), which is crucial for physical restoration and memory consolidation.
REM (Rapid Eye Movement) sleep, essential for emotional processing, might also be disrupted.
Prolongs Sleep Latency
This refers to the time it takes to transition from wakefulness to sleep. Caffeine consumption, especially in the evening, significantly prolongs this latency period.
Leads to Fragmented Sleep
Caffeine can cause more awakenings during the night, leading to fragmented and less restorative sleep.
Morning Grogginess and Dependency
Poor-quality sleep caused by caffeine may lead to morning grogginess, creating a cycle where individuals rely on caffeine to feel alert, further exacerbating sleep issues.
Half-Life of Caffeine
The half-life of caffeine is about 4-6 hours, meaning that even if consumed in the afternoon, it can linger in your system and affect sleep.
Individual Sensitivities
Some people are more sensitive to caffeine due to genetic differences in metabolism. For others, tolerance may reduce the impact over time, but sleep effects often persist.
While caffeine is a valuable tool for enhancing alertness and productivity, its effects on sleep patterns can be profound. From delaying sleep onset to reducing the quality of restorative sleep, its influence is undeniable. To enjoy the benefits of caffeine without sacrificing sleep, mindful consumption—especially regarding timing and quantity—is essential. Striking this balance can ensure you make the most of your waking hours while still prioritizing the restful sleep your body needs to thrive.