
posted 1st November 2023
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
வருடாந்த பரிசளிப்பு விழா
சாய்ந்தமருது ரோயல் நிறுவனத்தின் வருடாந்த பரிசளிப்பு விழாவும் மாணவர்களின் கலை நிகழ்ச்சியும் சாய்ந்தமருது "லீ மெரிடியன்" வரவேற்பு மண்டபத்தில் வெகு விமர்சையாக இடம்பெற்றது.
இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கல்முனை மாநகர சபை முன்னாள் முதல்வரும் மெட்ரோ பொலிட்டன் கல்லூரியின் தவிசாளரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உச்சபீட உறுப்பினருமான கலாநிதி சிராஸ் மீராசாஹிப் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
கௌரவ அதிதியாக சாய்ந்தமருது பிரதேச செயலக கணக்காளர் ஏ ஜே. நுஸ்ரத் பானு விசேட அதிதிகளாக கமு/கமு/லீடர் அஸ்ரப் வித்தியாலய அதிபர் எம் ஐ சம்சுதீன் , கமு/கமு/ஜீ.எம்.எம்.எஸ். வித்தியாலய அதிபர் எம் ஐ எம் . இல்லியாஸ் , முன்னாள் கல்முனை ஸாஹிராக் கல்லூரியின் அதிபர் எம் எம். இஸ்மாயில், கல்முனை வலயக் கல்வி அலுவலக ஆசிரிய ஆலோசகர் எம் எம். றபீக், சாய்ந்தமருது சமூர்த்தி வங்கி முகாமையாளர் ரியாத் ஏ மஜீட், இக்கல்லூரியின் அதிபர் செல்வி என். பாத்திமா சனோபர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதன்போது பிரதம அதிதி கலாநிதி சிராஸ் மீராசாஹிப் உரையாற்றுகையில்;
ஆங்கில கல்வியின் முக்கியத்துவம் பற்றியும் போட்டி நிறைந்த இந்த உலகத்தில் ஆங்கிலத்தில் எழுத, வாசிக்க, பேச ஒரு மனிதனால் முடியாவிட்டால் அவனால் எந்த விடயங்களையும் செய்ய முடியாத ஒரு துர்பாக்கிய நிலைக்கு ஆழாகிவிடுவான்.
ஆதலால் இங்குள்ள பெற்றொர்கள் கட்டாயம் ஆங்கில அறிவையும், கணிணி அறிவையும் உங்கள் பிள்ளைகளுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும். அதற்கான களங்களை அமைத்துக் கொடுக்கும் இது போன்ற பாடசாலைகளுக்கு இங்குள்ள அதிபர்கள், ஆசிரியர்கள், கல்வி அதிகாரிகள், தனவந்தர்கள் ஒத்துழைப்புக்களை வழங்கவேண்டும்.
உங்கள் பிள்ளைகளை நன்றாக வளர்த்துக் கொள்ளுங்கள். இன்று எமது பிரதேசங்களில் மாணவர்கள் போதைப் பாவனையின்பால் ஈர்க்கப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். அதிலிருந்து உங்களது பிள்ளைகளை பாதுகாத்துக் கொள்ளுங்கள்.
உங்களது பிள்ளைகளுக்கு சரியான வழிகாட்டுதல்களை வழங்குங்கள். O/L , A/L சித்தியடையவில்லை என்றால் கவலைப்படாதீர்கள். அதற்கேற்றவாறு அவர்களை பயிற்று வித்து டிப்ளோமா தொடக்கம் கலாநிதி வரை செல்லக்கூடிய கல்வியை வழங்கக் கூடிய அரச அங்கீகாரம் பெற்ற நிறுவனங்களை நாங்கள் தலைநகரில் 25 வருடங்களாகவும், கல்முனையில் 05 வருடங்களாகவும் நடாத்திக் கொண்டு வருகின்றோம்.
அவற்றில் கற்று பயன் பெற்று உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் நல்ல தொழில் வாய்ப்பினைப் பெற்றுக்கொள்ளக்கூடிய வாய்ப்பினை ஏற்படுத்தியுள்ளோம்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)