
posted 19th November 2023
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
வரலாற்றுச் சிறப்பு மிக்க மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்தின் சூரசம்ஹார நிகழ்வு
வரலாற்றுச் சிறப்பு மிக்க மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்தின் கந்தசஷ்டி உற்சவத்தின் சூரசங்கார நிகழ்வு நேற்று (18) வெகு சிறப்பாக நடைபெற்றுள்ளது.
இதன் போது முல மூர்த்திக்கு விசேட அபிஷேக ஆராதனைகள் இடம்பெற்று வசந்த மண்டப பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன.
பின்னர் முருகப் பெருமான் உள்வீதியூடாக வலம் வந்து பின்னர் வெளிவீதியுலா வந்து சூரனுடன் போர் புரிந்த நிகழ்வும் இடம்பெற்றது.
இந்த உற்சவத்தினை காண பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ்ந்தனர். முருகப்பெருமானை தரிசித்த பக்தர்கள் இஷ்ட சித்திகளை பெற்றுச் சென்றனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)