
posted 2nd November 2023
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
வன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதான பணி ஆரம்பம்
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள மாவீரர் துயிலும் இல்லங்கள் மாவீரர் தின நிகழ்வுகளுக்கு தயாராகி வருகின்றன.
இதற்கமைய முல்லைத்தீவு மாவட்டத்தில் வன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் இவ்வாண்டுக்கான மாவீரர் நாள் நிகழ்வுகள் செய்வதற்கான சிரமதானப் பணிகள் வன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலும் இல்ல பணிக் குழுவினரால் நேற்று புதன்ஆரம்பிக்கப்பட்டன.
முன்னதாக மாவீரர் களுக்கு ஈகச்சுடர் ஏற்றி மலர்மாலை அணிவித்து அகவணக்கம் செலுத்தி இடம்பெற்றதை தொடர்ந்து சிரமதானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
இவ்வாண்டும் கார்த்திகை 27 மாவீரர் நாள் உணர்வு பூர்வமாக இடம்பெறும் எனவும், அனைத்து மாவீரர் பெற்றோர் உறவுகளையும் கலந்துகொள்ளுமாறும் முன்னாயத்த பணிகளிலும் ஒத்துழைப்பு வழங்குமாறும் பணிக்குழுவினர் தெரிவித்தனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)