ரணிலும் விரைவில் அனுபவிப்பார்

துயர் பகிர்வு

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

ரணிலும் விரைவில் அனுபவிப்பார்

மாவீரர்களின் சாபத்தை கோட்டாபய ராஜபக்ஷ அனுபவித்ததுபோல் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அனுபவிக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இடம்பெற்ற விவாதத்தின் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தனது உரையில், “போரில் உயிரிழந்தவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு மதிய உணவு வழங்கியதற்காக ஜனநாயக போராளிகளின் கட்சியின் துணைத் தலைவர் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். இவர்கள் இச் சட்டத்தை வைத்து எமது இனத்தை முடக்கப் பார்க்கின்றார்கள்.

எமது இனத்துக்காக, இனத்தின் விடுதலைக்காக போராடிய மாவீரர்கள் துயிலும் இல்லங்களை தரைமட்டமாக்க முயலும் இந்த அரசாங்கம் மற்றும் இனவாதிகள் எம்மவர்களின் கல்லறைகளை பார்த்து இன்றளவிலும் பயப்படுவது ஏன்?

கார்த்திகை மாதம் எம்மவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் மாதமாகும். அஞ்சலி செலுத்துவதற்கு கூட இந்த நாட்டில் எமது இனத்துக்கு உரிமை இல்லையா? என கேள்வி எழுப்பினார்.

ரணிலும் விரைவில் அனுபவிப்பார்

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)