
posted 10th November 2023
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
யாழ்ப்பாண மாவட்டத்தில் மழையால் ஏழு குடும்பங்கள் பாதிப்பு
யாழ்ப்பாண மாவட்டத்தில் மழையால் இதுவரை ஏழு குடும்பங்களைச் சேர்ந்த 28 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 7 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும் யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என். சூரியராஜா தெரிவித்துள்ளார்.
இதுவரையான மழை வீழ்ச்சி குறித்து வினவும்போது அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
பருத்தித்துறை பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட பொலிகண்டி கிழக்கு பகுதியிலேயே இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
2023ஆம் ஆண்டு இதுவரைக்கும் 836.4 மில்லிமீட்டர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதுடன், நேற்றிரவு 8.11 மில்லிமீட்டர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)