
posted 22nd November 2023
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
மாவடிப்பள்ளியில் மனித நுகர்வுக்கு பொருத்தம் இல்லாத பழங்கள்
மாவடிப்பள்ளி பிரதான வீதியில் மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற பழங்களை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் கைப்பற்றினர்.
காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்கு உட்பட்ட மாவடிப்பள்ளி பிரதான வீதியில் விற்பனைக்கு வைத்திருந்த மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற பழங்களை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் கைப்பற்றியுள்ளனர்.
காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் தஸ்லிமா பஷிரின் வ அறிவுறுத்தலுக்கு அமைய சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பொதுச் சுகாதார பரிசோதகர்கள் மேற்கொண்ட திடீர் பரிசோதனையின்போது மனித நுகர்க்கு பொருத்தமற்ற அழுகிய இந்த பழங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இந்த பழங்களை விற்பனைக்காக காட்சிப்படுத்திய நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளதுடன் இனிமேல் பொதுமக்கள் வீதியில் விற்பனை செய்யப்படுகின்ற தரமற்ற பொருட்களை கொள்வனவு செய்வது தொடர்பில் அவதானமாக செயல்படுமாறும் கேட்கப்பட்டுள்ளனர்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)