மாணவர்கள் போராட்டம்

துயர் பகிர்வு

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

மாணவர்கள் போராட்டம்

மயிலத்தமடு - மாதவனை கால்நடை பண்ணையாளர்களின் அறவழி போராட்டம் 49ஆவது நாளாக சித்தாண்டியில் தொடர்ந்தது.

பண்ணையாளர்களும், கால்நடைகளும் நீண்டகாலமாக எதிர்நோக்கி வரும் அநீதிக்கு எதிராக நீதி வேண்டி இந்தச்சுழற்சி முறை போராட்டம் இடம்பெற்று வருகிறது.

இதற்கு வலுச் சேர்க்கும் முகமாக நேற்று (02) வியாழக்கிழமை கிழக்கு பல்கலைக்கழகத்தின் அனைத்துப் பீட தமிழ் மாணவர்கள், போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து அவர்களது நீண்ட கால மேய்ச்சல் தரை பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு பெற்றுத் தருமாறு அரசாங்கத்துக்கு கோரிக்கை விடுத்தனர்.

கிழக்கு பல்கலைக்கழக முன்றலில் வியாழக்கிழமை காலை ஒன்றுகூடிய மாணவர்கள் கோஷங்களை எழுப்பியவாறும், பதாதைகளை ஏந்தியவாறும் பண்ணையாளர்களின் அறவழிப் போராட்டம் நடைபெறும் இடத்துக்கு ஊர்வலமாக வந்து அவர்களுடன் இணைந்து கவனவீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். வீதியில் நின்று ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போதுந

  • அம்பிட்டிய தேரரை கைது செய்
  • அடக்காதே, அடக்காதே
  • காவி உடை கொண்டு அடக்காதே
  • வேண்டும், வேண்டும் நீதி வேண்டும்
  • கைது செய், கைது செய் சூழ்ச்சிக்காரரை கைது செய்

என்பன போன்ற கோஷங்களை ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டோர் எழுப்பினார்கள்.

இந்தப் போராட்டத்தில் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், முன்னாள் பராளுமன்ற உறுப்பினர்களான சீ. யோகேஸ்வரன், ப. அரியநேத்திரன், ஞா. சிறிநேசன், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அமைப்பாளர் த. சுரேஷ் ஆகியோர்கள் கலந்து கொண்டு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தனர்.

மாணவர்கள் போராட்டம்

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)