மன்னிப்பு கோரினார் சுமனரத்ன தேரர்

துயர் பகிர்வு

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

மன்னிப்பு கோரினார் சுமனரத்ன தேரர்

தென்னிலங்கையிலுள்ள தமிழர்களை வெட்டுவேன் எனக்கூறிய சர்ச்சைக்குரிய கருத்துத் தொடர்பாக அம்பிட்டிய சுமணரத்ன தேரர் மன்னிப்புக் கோரியுள்ளார். இவ்விடயம் தொடர்பாக காணொலி ஒன்றினை வெளியிட்டு தனது கருத்தினைப் பதிவு செய்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“மட்டக்களப்பு, ஜயந்தபுரம் பகுதியில் அமைந்துள்ள மயானம் கடந்த 21ஆம் திகதி தரைமட்டமாக்கப்பட்டது. அங்கு எனது தாயின் சமாதியும் உள்ளதால், பொலிஸாருடன் அந்தப் பகுதிக்குச் சென்று பார்வையிட்டேன். இதன்போது சிலர் என்னை தூண்டும் வகையில், காணொளிகளை எடுக்க ஆரம்பித்தமையால், நானும் கோபத்தில் சில கருத்துக்களை வெளியிட்டிருந்தேன். இதனை தற்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் சிலர், தமிழ் மக்களை குழப்புவதற்காக பயன்படுத்தி வருகிறார்கள்.

நான் கூறிய கருத்துக்கள் இனவாதத்தை தூண்டும் கருத்துக்கள் என தமிழ் மக்களிடம் கூறிவருகிறார்கள். விசேடமாக, கூட்டமைப்பின் உறுப்பினர் இரா. சாணக்கியன், இந்த விடயம் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில், நான் ஒரு பைத்தியக்காரன் என்றும், எனது தாயின் சமாதி இங்கே இருக்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதிலிருந்தே, சாணக்கியன்தான் இந்த மயானத்தை உடைக்க பணித்துள்ளார் என நான் தெரிந்துக் கொண்டுள்ளேன். அப்படி அவர் செய்யாவிட்டால், இந்த செயற்பாட்டை ஏன் அவர் சரியாக காண்பிக்க முற்பட வேண்டும்? இது தொடர்பாக நீதிமன்றத்திற்கு சென்றபோது, மயானத்தை தரைமட்டமாக்கிய தரப்பினர் குற்றத்தை ஒப்புக்கொண்டதோடு, மீண்டும் மயானத்தை அமைத்துத் தருவதாகவும் கூறியுள்ளனர்.

நானும், தமிழ் மக்களிடம் மன்னிப்புக் கோருவதாக நீதிமன்றத்திடம் அறிவித்தேன். நான் கவலையுடன் தான் அன்று அவ்வாறு பேசினேன். இது இனவாதக் கருத்து கிடையாது. தனி ஈழம் வரப்போவதாக தெரிவித்து, தமிழ் மக்களின் வாக்குகளை பெற்றுக் கொள்வதற்காகவே சில நபர்கள் இவற்றை பயன்படுத்துகிறார்கள். இதனை அனைத்து மக்களும் புரிந்துக் கொள்ள வேண்டும் என்றார்.

மன்னிப்பு கோரினார் சுமனரத்ன தேரர்

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)

மேலதிக செய்திகள் | Additional News

Varisu - வாரிசு - 10.12.2025

Varisu - வாரிசு - 10.12.2025

Read More
Varisu - வாரிசு - 08 & 09.12.2025

Varisu - வாரிசு - 08 & 09.12.2025

Read More
எட்டாத அன்பு

எட்டாத அன்பு

Read More
Varisu - வாரிசு - 06.12.2025

Varisu - வாரிசு - 06.12.2025

Read More