மத்திய அரசாங்கத்தின் கீழ்  பொத்துவில் ஆதார வைத்தியசாலை

துயர் பகிர்வு

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

மத்திய அரசாங்கத்தின் கீழ் பொத்துவில் ஆதார வைத்தியசாலை

பொத்துவில் ஆதார வைத்தியசாலை மிக விரைவில் மத்திய அரசாங்கத்தின் கீழ் கொண்டுவரப்பட்டு பாரியளவில் அபிவிருத்தி செய்யப்படவுள்ளதாகவும், இதற்கு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் முழுமையாக ஒத்துழைப்பு வழங்கி வருவதாக பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.எம்.எம். முஷாரப் தெரிவித்தார்.

பொத்துவில் ஆதார வைத்தியசாலையில் நிர்மாணிக்கப்பட்ட புதிய நிர்வாகக் கட்டிடத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

சுற்றுலாத்துறைக்குப் பெயர்போன அருகம்பே பிரதேசம் இங்கு அமைந்திருப்பதால் இவ்வைத்தியசாலையை மத்திய அரசாங்கத்தின் கீழ் கொண்டு வரப்பட வேண்டிய அவசியத்தை ஜனாதிபதியும் வெளிப்படுத்தியுள்ளதாக பாராளுமனற் உறுப்பினர் முஷாரப் இதன்போது சுட்டிக்காட்டினார்.

பொத்துவில் ஆதார வைத்தியசாலையின் பதில் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் அப்துல் றஹீம் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் கலந்துகொண்டு புதிய நிர்வாகக் கட்டிடத்தை திறந்து வைத்தார்.

மேலும், இந்நிகழ்வுக்கு கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் ஜே.ஜே. முரளிதரன், கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர், ஆளுநரின் அதிகாரிகள், வைத்தியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

மத்திய அரசாங்கத்தின் கீழ்  பொத்துவில் ஆதார வைத்தியசாலை

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)