
posted 10th November 2023
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
பொது மக்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை
மட்டக்களப்பு பொலிஸ் தலைமையகம் பொதுமக்களுக்கு அறிவித்தல் விடுத்து துண்டுபிரசுரம் ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் அண்மைக்காலமாக பகலிலும், இரவிலும் திருட்டுச் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. எனவே பொதுமக்கள் உடைமைகளை கவனமாகவும் பாதுகாப்பாகவும் வைத்திருப்பது உங்கள் பொறுப்பாகும்.
எனவே பொதுமக்கள் துவிச்சக்கரவண்டி, மோட்டர்சைக்கிள், முச்சக்கரவண்டி, கார், வான்களை பூட்டி திறப்புக்களை பாதுகாப்பாக வைத்துகொள்வதுடன், தங்க ஆபரணங்கள், பணம், ஆவணங்கள் போன்றவற்றையும் பாதுகாப்பாக வைத்துக் கொள்ளவும்.
அதேவேளை தாங்கள் வீட்டை விட்டு வெளியே செல்லும்போது வீட்டைநன்றாக பூட்டி திறப்பைக் கொண்டு செல்லவும். அதைவிடுத்து திறப்பை பூச்சாடியின் கீழே, கால்துடைப்பான் கீழே வைப்பதை தவிர்ப்பதுடன் சிறுபிள்ளைகளை தனிமைப்படுத்தி வீட்டில் விட்டு வெளியே செல்வதை தவிர்க்கவும்.
அதேவேளை யாசகம் பெறும் மற்றும் பொருட்களை விற்பனை செய்வதாக கூறிவரும் நபர்கள் மீது கவனமாக இருக்கவும். வெளியில் வாகனம் நிறுத்த தேவை ஏற்பட்டால் சிசிரிவி கமெரா பொருத்தப்பட்ட இடத்தில் நிறுத்தவும்.
சந்தேகத்துக்கு இடமாக நபர்கள் நடமாடினால் உடன் 119 அவசரசேவை அல்லது 0718591130 பொலிஸ் பொறுப்பதிகாரி அல்லது 065 2224422 பொலிஸ் நிலைய இலக்கத்துக்கு அழைத்து பொலிஸாருக்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என்றுள்ளது.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)