
posted 18th November 2023
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
புதுக்குடியிருப்பில் வெள்ளம்
கடந்த வியாழக்கிழமை (16) இரவு பெய்த கடும் மழை காரணமாக முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பின் நகர் பகுதியில் ஏற்பட்ட பெரு வெள்ளத்தினால் இயல்பு நிலை பாதிக்கப்பட்டது.
வேணாவில் பகுதியில் உள்ள குளம் ஒன்றின் ஊடாக வெளியேறிய நீர் புதுக்குடியிருப்பின் நகர் பகுதியில் தேங்கியதாகவும், இதனால் நகரில் உள்ள சிறிசுப்பிரமணிய வித்தியாசாலை தற்காலிகமாக மூடப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
பாடசாலை வகுப்பறைகள், நகரில் உள்ள வர்த்தக நிலையங்களுக்குள் நீர் தேங்கியிருப்பதாகவும், ஏற்கனவே சீரமைக்கப்பட்ட வடிகால்கள் ஊடாக நீர் வெளியேற முடியாத நிலையில் உள்ளதாகவும், இதனால் புதுக்குடியிருப்பு நகரின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது.
இதேவேளை, புதுக்குடியிருப்பின் நகர் பகுதியை அண்மித்த பல வீடுகளுக்குள்ளும் வெள்ள நீர் தேங்கியதாக தெரிவிக்கப்பட்டது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)