பிட்டு புரக்கேறி பருத்தித்துறையில் இளைஞன் பலி!

துயர் பகிர்வு

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

பிட்டு புரக்கேறி பருத்தித்துறையில் இளைஞன் பலி!

பிட்டு சாப்பிடும் போது புரக்கேறி சுவாசக் குழாயில் பிட்டு சென்றதனால் நெஞ்சடைப்பு ஏற்பட்டு இளைஞன் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

சம்பவம் புனிதநகர், கற்கோவளம் பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை (14) இடம்பெற்றுள்ளது.

இச் சம்பவத்தில் இராசரத்தினம் சுமணன் வயது 21 என்பவரே உயிரிழந்தவராவார்.

கடந்த 14ம் திகதி உணவு அருந்திவிட்டு இருந்தவர் நெஞ்சடைப்பு ஏற்பட்டதாக கூறியதால் வீட்டார் சுடு நீர் வழங்கியுள்ளனர்.

இதன் பின்னர் இளைஞர் மயங்கிச் சரிந்த நிலையில் பருத்தித்துறை ஆதாரவைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றபோது இளைஞன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.

இம் மரணம் தொடர்பில் பருத்தித்துறை மரணவிசாரணை அதிகாரி சதானந்தம் சிவராஜா விசாரணைகளை மேற்கொண்டு உடற்கூற்றுப் பரிசோதனைக்கு உத்தரவிட்டார்.

இதற்கமைய சட்ட வைத்திய அதிகாரி பி. வாசுதேவா உடற்கூற்றுப் பரிசோதனையை மேற்கொண்டிருந்தார். இதன் போது இளைஞனின் சுவாசக் குழாய்க்குள் உணவு மாதிரி காணப்பட்டதாகவும், சுவாசக் குழாக்குள் உணவுப் பதார்த்தம் அடைத்துக் கொண்டதன் காரணத்தாலேயே உயிரிழப்பு சம்பவித்துள்ளதாக மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிட்டு புரக்கேறி பருத்தித்துறையில் இளைஞன் பலி!

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)