
posted 7th November 2023
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
பாராளுமன்ற சிறப்புரிமையை மீறிய புத்தபிக்கு
என்னுடைய பாராளுமன்ற சிறப்புரிமையை மட்டக்களப்பு புத்த பிக்கு மீறியுள்ளார் என பாராளுமன்றத்தில் உரையாற்றிய மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் கூறினார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
மக்களுக்கு எதிராக பல அடாவடிகளை நிகழ்த்திவரும் மட்டக்களப்பு ஸ்ரீமங்களாராம விஹாரையின் விஹாராதிபதி அம்பிட்டிய சுமண ரத்ன தேரர் தொடர்பான பிரேரணை தொடர்பாக. கடந்த ஒக்டோபர் மாதம் 18 ஆம் திகதி பாராளுமன்றத்தில் ஜனாதிபதியின் கட்டளையை பொலிசார் நடைமுறை படுத்தப்படவில்லை என்பதனை வலியுறுத்தியிருந்தேன். அவ் விடையத்தை இத் தேரர் வேறு வகையில் திரிவுபடுத்தி நான் பாராளுமன்றத்தில் பேசும் போது என்னை தடுக்க அங்கு முதுகெலும்புள்ள சிங்கள பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒருவரும் இல்லையா என்று எனது சிறப்புரிமையை மீறும் ஓர் காணொளியினை வெளியிட்டுள்ளார். அத்துடன் கிழக்கில் வசிக்கும் தமிழர்கள் ஒவ்வெருவரையும் துண்டு துண்டாக வெட்டுவேன் எனவும் அச்சுறுத்தியுள்ளார். இவ்வாறாக என்னையும் நான் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்களையும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கும் இப் புத்த பிக்குவுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)