நாடாளுமன்றில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

துயர் பகிர்வு

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

நாடாளுமன்றில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

அன்று தென்னிலங்கையுடன் தேன்நிலவு - இன்று தீர்வு வழங்காதென்று சுயலாபக் கூச்சல் – நாடாளுமன்றில் அமைச்சர் டக்ளஸ் சுட்டிக்காட்டு!

(எஸ் தில்லைநாதன்)

வளர்ச்சியடைந்த நாடுகள் மட்டுமன்றி வல்லரசு நாடுகளும் கூட பொருளாதார வீழ்ச்சி கண்ட வேளை வளர்ந்து வரும் நாடாகிய இலங்கைத் தீவை தன் ஆளுமையால் தற்காத்தவர் ஜனாதிபதிபதி ரணில் விக்ரமசிங்க என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் கடற்றொழில் அமைச்சரமான டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டியுள்ளார்.

2024 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் தொடர்பில் நாடாளுமன்றில் தனது கருத்துக்களை முன்வைத்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்;

தென்னிலங்கை எமக்கு தீர்வு வழங்காதென்று சுயலாபக் கூச்சிலிடுவோர் இதே ஆளுமை மிக்க ரணில் விக்கிரமசிங்க அவர்களுடன் நான்காண்டுகள் தேன் நிலவு கொண்டாடி மகிழ்ந்தனர்.

எதை அவர்கள் சாதித்தனர்? இதற்கு நீங்கள் ஆயிரம் வியாக்கியானங்கள் கொடுத்தாலும், போதிய அரசியல் பலத்தோடு இருந்தும் நீங்கள் மாபெரும் வரலாற்று தவறு விட்டதை பதிவு செய்துள்ளது. 2009ஆம் ஆண்டு மே மாதத்திற்கு முன்னர் தமது உதடுகளுக்கு தாமே சீல் வைத்துக்கொண்டவர்கள். இன்று அரசாங்கம் நல்லிணக்கத்திற்கு சீல் வைத்திருக்கிறது என்று சுதந்திரமாக பேசுகிறார்கள். நல்ல மாற்றம்.. வரவேற்கிறேன். சமாதானத்திற்கான கதவுகளை அரசாங்கம் இறுக மூடியிருப்பதாக சொல்கிறார்கள்.

பாவம் அவர்கள் கண்ணிருந்தும் குருடர்கள். செவியிருந்நதும் செவிடர்கள். கண்ணிழந்த மனிதர் முன்னே ஓவியம் வைத்தார். செவியிழந்த மனிதர் முன்னே பாடலிசைத்தார். எத்தனை வாய்ப்புகள் கிடைத்தும் அத்தனையும் பன்றிக்கு முன்னால் வீசப்பட்ட முத்தாக போய் விட்டன.

இலங்கை இந்திய ஒப்பந்தம், இதை ஏற்றுக்கொண்ட ஒரு கட்சியின் காலில் விழுந்து இடுப்பை பிடித்து மெல்ல எழுந்து கழுத்தை நெரிக்கும் அந்த வாத்தியார் இலங்கை இந்திய ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்ட ஒருவராகவே பார்க்கப்படுகிறார்.

தென்னிலங்கை இறுக பூட்டி வைத்திருக்காம ஒப்புக்கொள்ளலாம். அது இலங்கை இந்திய ஒப்பந்தத்திற்கு முந்திய வரலாறு.
சந்திரிகா அம்மையார் இலங்கை இந்திய ஒப்பந்தத்தை விட பல மடங்கு முன்னேற்றகரமான தீர்வை முன் வைத்த போது இந்த வாத்தியார் இன்று தொத்தி ஏறியிருக்கும் கட்சி அன்று அதை எதிர்த்து கொழும்பில் ஊர்வலம் போனது. எந்த அடிப்படையில் போனீர்கள்?

அப்போது இந்த வாத்தியார் தன் கண்களுக்கும், காதுகளுக்கும் சீல் வைத்துக்கொண்டிருந்தாரா?.. அல்லது கட்டாயப் பயிற்சியில் விறகுக்கட்டை ஏந்திக்கொண்டிருந்தாரா? ஜனாதிபதி அவர்கள் மக்களுடன் பேசி பிரச்சனைகளைத் தீர்க்க தயாராக இருக்கின்றார். ஆகையால் பிரச்சனைகளைத் தீர்க்க முன்வருமாறு கேட்டுக் கொள்கிறேன்.

எனவே, இந்த நாட்டினை மீளக் கட்டியெழுப்ப வேண்டிய வழிமுறைகளையும், எமது நாட்டு மக்களின் வாழ்க்கை நிலையினை பேணிப் பாதுகாக்க வேண்டிய வழிமுறைகளையும் நன்கு அறிந்தவரும் அவரேயாவார்.

அந்த வகையில்தான் 2024ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தினை அவர் முன்வைத்திருக்கின்றார் என்பதை நான் இங்கு கூறியே ஆக வேண்டும் எனவும் சுட்டிக்காட்டிய அமைச்சர் எமது நாடு எத்தகைய பொருளாதார வீழ்ச்சியிலிருந்து மீண்டு வருகின்றது என்பதை யாரும் மறந்துவிடவோ, மறுத்துவிடவோ முடியாது. இந்த நாடு, சூழ்ச்சிகரமான இக்கட்டு நிலைக்குத் தள்ளப்பட்டிருந்த காலகட்டத்தில், இந்த நாட்டினைப் பொறுப்பேற்க எவருமே முன்வராத நிலையில், தைரியமாக முன்வந்து இந்த நாட்டினைப் பொறுப்பேற்ற ஒரேயொரு தலைவர் எமது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்ஹ அவர்கள் என்றும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

நாடு முழுமையாக நிமிராத நிலையிலும் பாதீட்டில் மக்கள் நலன் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது - அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

எமது நாட்டின் பொருளாதார நிலைமையானது, இன்னமும் முழுமையான சுமுக நிலைக்கு வந்துவிடவில்லை. அதனை சுமுக நிலைக்குக் கொண்டு வர வேண்டும். இந்த நிலையில் எமது தேசிய உற்பத்திகளை மேலும் வலுப்படுத்த வேண்டும். அதேநேரம், அரசாங்கத்தை நம்பி வாழ்கின்ற, அரச உதவிகளை, மானியங்களை, நிவாரணங்களைப் பெறுகின்ற மக்களை கைவிடவும் முடியாது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் கடற்றொழில் அமைச்சரமான டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டியுள்ளார்.

2024ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் தொடர்பில் நாடாளுமன்றில் தனது கருத்துக்களை முன்வைத்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்;

பல்துறை சார்ந்த பணியாளர்களை பேண வேண்டும். இத்தகைய நானாவித விடயங்களையும் தூர நோக்குடன் சிந்தித்து இந்த வரவு – செலவுத் திட்டத்தினை முன்வைத்துள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்ஹ அவர்களுக்கு எனதும், எனது மக்கள் சார்ந்ததுமான நன்றியினை இந்த சபையிலே தெரிவித்தக் கொள்கின்றேன்.

அந்த வகையில், அரச ஊழியர்களது வாழ்க்கைச் செலவின கொடுப்பனது, 10,000 ரூபாவினாலும், ஓய்வூதியம் பெறுகின்றவர்களுக்கான கொடுப்பனவானது 2,500. ரூபாவினாலும், மாற்று வலு கொண்டவர்களுக்கான மற்றும் சிறுநீரக நோயாளர்களுக்கான கொடுப்பனவானது 2,500 ரூபாவினாலும், மூத்த பிரஜைகளுக்கான கொடுப்பனவானது 1,000 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், ஆறுதல் (அஸ்வெசும) திட்டத்திற்கென முன்பு ஒதுக்கப்பட்ட 60 பில்லியன் ரூபாவினை 183 பில்லியன் ரூபா வரையிலும் அதிகரிப்புச் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும், நாட்டின் பொருளாதார நிலை காரணமாக, சில வரையறைகளுக்கு உட்படுத்தப்படிருந்த அரச பணியாளர்களுக்கான அனர்த்த கடன் கொடுப்பனவானது அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் வழமைபோல மீண்டும் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது


வடக்கின் கடற்றொழிலுக்கு விசேட நிதி - சந்தர்ப்பத்தை சாதகமாகப் பயன்படுத்துவோம் அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

வடக்கின் கடற்றொழிலை மேலும் விருத்தி செய்கின்ற வகையில், வடக்கின் கடற்றொழில் தொடர்பிலான வசதிகளை மேற்கொள்வதற்கென 500 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதுடன், நீர் வேளாண்மைக்கென 200 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் கடற்றொழில் அமைச்சரமான டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டியுள்ளார்.

2024ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் தொடர்பில் நாடாளுமன்றில் தனது கருத்துக்களை முன்வைத்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்;

இந்த நிதியினைக் கொண்டு நாம் வடக்கின் கடற்றொழில் துறையினை மேலும் அபிவிருத்தி செய்வதற்கும், அதன் முகாமைத்துவத்தினை மேலும் வலுப்படுத்துவதற்கும் தேவையான திட்டங்களை முன்னெடுக்கவுள்ளதுடன், நாடளாவிய ரீதியில் உணவுப் பாதுகாப்பு, போசாக்கு உணவினை மேம்படுத்துவதற்கு, நன்னீர் வேளாண்மையினை அனைத்து நீர் நிலைகளையும் பயன்படுத்தி மேற்கொள்வதற்கும் தயாராக உள்ளோம். இவ் விடயங்கள் தொடர்பிலான விரிவான விளக்கங்களை கடற்றொழில் அமைச்சு தொடர்பிலான விவாத உரையின்போது தரலாம் என நினைக்கின்றேன் என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

தேசிய நல்லிணக்கத்தை வலுப்படுத்த எம்மைத்தவிர யாரும் முன்வரவில்லை – அமைச்சர் டக்ளஸ்!

இந்த அரசாங்கம் இன முரண்பாடுகளை முன்னெடுத்து வருவதாக அதாவது, இலங்கையின் சுதந்திரத்திற்குப் பின்னரான அரசாங்கங்கள் இன பாகுபாடுகளையே முன்னெடுத்து வருவதாக ஒரு சிலர் தங்களது சுயலாப அரசியலுக்காக கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர்.

இலங்கை - இந்திய ஒப்பந்தத்திற்கு முந்தைய அரசாங்கங்கள் இத்தகையதொரு மனோ நிலையில் செயற்பட்டு வந்திருந்ததை நானே பல தடவைகள் பல இடங்களிலும் பகிரங்கமாக தெரிவித்திருக்கிறேன். அதுதான் உண்மை.

ஆனால், இலங்கை – இந்திய ஒப்பந்தத்திற்கு பின்னர் இந்த நாட்டில் மாறி, மாறி ஆட்சிக்கு வந்துள்ள அரசாங்கங்கள் இத்தகைய மனோ நிலையில் இல்லாமல், இனங்களிடையே ஐக்கியத்திற்கான வழிமுறைகளை முன்னிட்டு, செயற்பட்டு வந்திருப்பதையே எம்மால் காணக்கூடியதாக இருக்கின்றது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் கடற்றொழில் அமைச்சரமான டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டியுள்ளார்.
2024ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் தொடர்பில் தனது கருத்துக்களை முன்வைத்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்;

இலங்கை - இந்திய ஒப்பந்தத்திற்கு பின்னரான அரசாங்கங்கள் இத்தகைய நிலைப்பாட்டினை எடுத்து வந்திருந்த போதிலும், எமது தரப்பில் அதனைப் பயன்படுத்திக் கொள்வதற்கு எம்மைத் தவிர வேறு எவரும் முன்வரவில்லை என்பதே எமது வரலாற்றின் உண்மை நிலைமையாகும்.

இதைவிடுத்து சுயலாப அரசியல் நலன்களுக்காக தொடர்ந்தும் அரசாங்கங்களைக் குறைகூறிக் கொண்டிருப்பது ஏற்புடையதல்ல.
எந்தத் தரப்பிலும் ஒரு சில புல்லுருவிகள் இல்லாமல் இல்லை. அதற்காக ஒட்டுமொத்த தரப்பினர் மீதும் தொடர்ந்து பலிபோட்டுக் கொண்டிருப்பது மானுட தர்மத்திற்கே உகந்த செயல் கிடையாது.
கிழக்கு மாகாணத்திலே மயிலத்தமடு பகுதியில் உண்மையிலேயே கால்நடைகள் வளர்ப்போருக்கு மேய்ச்சல் தரை தொடர்பில் பிரச்சினை இருந்து வருகின்றது. இது தொடர்பில் ஏற்கனவே பல வருடங்களுக்கு முன்பாக நான் நாடாளுமன்றத்திலே பிரச்சினை எழுப்பியிருக்கிறேன். இந்த விடயம் தொடர்பில் எமது மேன்மைதங்கிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்ஹ அவர்கள் நடைமுறைச் சாத்தியமான நடவடிக்கயினை எடுத்துள்ளார்.
அதனை செயற்படுத்துவதில் சில தாமதங்கள் ஏற்பட்டு வருகின்றன. எனவே, இது தொடர்பில் ஜனாதிபதி தனது அவதானத்தினை மீளவும் செலுத்த வேண்டுமெனவும் கேட்டுக் கொள்கின்றேன் என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

நாடாளுமன்றில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)