
posted 10th November 2023
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் கந்தசஷ்டி உற்சவகால வீதித்தடை
எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (14) தொடக்கம் 19 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெறவுள்ள நல்லூர் கந்தசுவாமி ஆலய கந்தசஷ்டி உற்சவ காலத்தில் வழமைபோல தற்காலிகமாக வீதிகள் தடை செய்யப்படவுள்ளது.
14ஆம் திகதி தொடக்கம் 17 ஆம் திகதி வரை மற்றும் 19.11.2023 ஆம் திகதியும் பி.ப 5.00 மணி தொடக்கம் பி.ப 6.00 மணி வரையும் 18ஆம் திகதி சூரன்போர் அன்று நண்பகல் 12.00 – பி.ப 7.00 மணி வரையும் அவ்வாறு வீதி தடைசெய்யப்படும். இதன்போது பொதுமக்கள் மாற்றுப்பாதை ஒழுங்குகளை கடைப்பிடிக்குமாறு யாழ். மாநகர ஆணையாளர் அறிவித்துள்ளார்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)