
posted 23rd November 2023
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
தேசிய வாசிப்பு மாதம்
மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் கீழ் இயங்கும் துறைநீலாவணை பொது நூலக வாசகர் வட்டம் தேசிய வாசிப்பு மாதத்தினையொட்டி நடாத்திய போட்டிகளின் பரிசளிப்பு விழாவும், கலைஞர் கௌரவிப்பும் கலை நிகழ்வும் துறைநீலாவணை மட்/பட்/துறைநீலாவணை சித்தி விநாயகர் வித்தியாலய நகுலேஸ்வரி கலையரங்கில் வெகு சிறப்பாக இடம்பெற்றது.
துறைநீலாவணை பொது நூலக வாசகர் வட்டத்தின் தலைவர் எஸ். ஜெயானந்தம் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் செயலாளர் சா. அறிவழகன் பிரதம அதிதியாகவும் சனசமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் சி. குகநேசன் கௌரவ அதிதியாகவும். சிவஸ்ரீ நாகராசா குருக்கள் மட்/பட்/சித்தி விநாயகர் வித்தியாலய அதிபர்.சீ. பேராளன் மட்/பட்/துறைநீலாவணை மகாவித்தியாலய பிரதி அதிபர் இ.லிங்கநாதன் ஓய்வு நிலை அதிபர்களான பூ. நவரெத்தினராசா. த. கணேசமூர்த்தி அதிபரும் ஊடகவியலாளருமான செல்லையா பேரின்பராசா கலைஞர் ஏ.ஓ. அனல் ஓய்வுநிலை ஆசிரியர்.க. சின்னத்தம்பி சமூக செயற்பாட்டாளர்.எஸ். தீபன் ஊடகவியலாளர்களான இ.சுதாகரன் க. விஜயரெத்தினம் ஆகியோர் அழைப்பு அதிதிகளாகவும் கலந்து சிறப்பித்தன்ர்.
இந் நிகழ்வில் பிரதேச சபையின் செயலாளர் சா. அறிவழகன் தேசிய கலைஞர் ஆசிரியர் ஏ.ஓ. அனல் துறைநீலாவணை பொது நூலக வாசகர் வட்டத் தலைவர் எஸ். ஜெயானந்தம் ஆகியோர் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)