
posted 17th November 2023
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
ஜனாதிபதி ரணில் முன்வைத்த யோசனை நடைமுறை சாத்தியமற்றது
2024ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்டத்தில் ஜனாதிபதியும் நிதியமைச்சருமான ரணில் விக்கிரமசிங்க முன் வைத்த பல யோசனைகள் தற்போதைய நடைமுறைக்கு சாத்தியமற்றதென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கிம் தெரிவித்தார்.
2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தை ஜனாதிபதி முன் வைத்ததைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
கடந்த வருடம் அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்ட வரவு செலவுத் திட்ட யோசனைகளில் 90 வீதமானவை நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பதை நாம் அறிவோம்.
அதேபோன்று அரசாங்கத்தினால் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுவரும் கடன் மறுசீரமைப்பு இன்னும் நடைமுறைப்படுத்தப்படவில்லை. அதனை நடைமுறைப்படுத்தாமல் வேறு எதையும் முன்னெடுக்க முடியாது.
2024 வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக ஜனாதிபதி சிறந்த விடயங்களை பாராளுமன்றத்தில் முன்வைத்தார். எனினும் அரசாங்கத்தினால் அதனை நடைமுறைப்படுத்த முடியுமா? என்பதே கேள்வியாக உள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)