
posted 22nd November 2023
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
செயலாளர் மருதமுனைக்கு விஜயம்
கிழக்கு மாகாண கல்வியமைச்சின் செயலாளர் எச்.ஈ.எம். டபிள்யு.ஜி. திஸாநாயக்க மருதமுனை பாடசாலைகளுக்கு விஜயம் மேற்கொண்டார்.
கல்முனை வலயக்கல்விப் பணிப்பாளர் எம். எஸ். சஹ்துல் நஜீமின் ஆலோசனைக்கமைய, ஆசிய மன்றத்தின் முன்னாள் செயற்திட்ட ஆலோசகர் எம்.ஐ.எம். வலீத், கிழக்கு மாகாண கல்வியமைச்சின் செயலாளரிடம் முன்வைத்த கோரிக்கைக்கு அமைய மருதமுனை அல் - மதீனா வித்தியாலயத்திற்கு இரண்டு மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு கிடைக்கப் பெற்றுள்ளது.
பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக் குழுவின் அனுசரணையுடன் பாடசாலை நிர்வாகத்தினர் எடுத்துக்கொண்ட முயற்சியின் பயனாக மாகாணக்கல்வித் திணைக்களத்தினால் மேற்படி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட ஆவணம் உத்தியோகபூர்வமாக அதிபர் ஏ.குனுக்கத்துல்லாஹ், பிரதி அதிபர் என்.எம். முபீன் ஆகியோரிடம் கையளிக்கப்பட்டது.
மேலும் அல் மனார் மத்திய கல்லூரிக்கு சுமார் ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான விளையாட்டு உபகரணங்களும் நேற்று கல்வி அமைச்சின் செயலாளர் எச்.ஈ.எம்.டபிள்யூ.ஜீ. திசாநாயக்கவால் அதிபர் ஐ. உபைதுல்லாஹ்விடம் கையளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் பிரதி அதிபர் ஹஸ்மி மூஸா, சிரேஷ்ட உடற்கல்வி ஆசிரியர் எம்.ஏ.எம். அஸ்வர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)