
posted 18th November 2023
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய தண்டம் விதிக்கப்பட்ட உணவகம்
திருநெல்வேலி ஆடியபாதம் வீதியில் அமைந்துள்ள பிரபல அசைவ உணவகத்துக்கு எதிராக 2018ஆம் ஆண்டு அச்சமயத்தில் திருநெல்வேலி பொதுச் சுகாதாரப் பரிசோதகராக கடமையாற்றிய தி.கிருபனால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
சுகாதார சீர்கேடு தொடர்பில் பல்வேறு குற்றச்சாட்டுகளுடன் குறித்த வழக்கு மேலதிக நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
அச்சமயத்தில் உணவக உரிமையாளர் குற்றத்தை ஏற்காத நிலையில் வழக்கானது நீதிமன்றில் தொடர் விசாரணைக்காக நியமிக்கப்ட்டு விசாரணை கடந்த 05 வருடங்களாக நடைபெற்று வந்தது.
இந்நிலையில் வழக்கு விசாரணைகள் நிறைவடைந்த நிலையில் நேற்று முன்தினம் புதன் (15) தீர்ப்புக்காக வழக்கு திகதி இடப்பட்டு இருந்தது. வழக்கின் தீர்ப்பை வழங்கிய மேலதிக நீதவான், இதுவரை நடைபெற்ற விசாரணைகளின் அடிப்படையில் உணவக உரிமையாளர் குற்றவாளி என தீர்ப்பளித்தார். அத்துடன் உணவக உரிமையாளருக்கு 25 ஆயிரம் ரூபா தண்டப்பணமும் விதிக்கப்பட்டது.
உணவக உரிமையாளர் சார்பில் சிரேஸ்ட சட்டத்தரணி ஸ்ரீகாந்தா முன்னிலயாகி இருந்தார். வழக்கு தொடுநர் சார்பில் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் ம. இராஜமேனன், மற்றும் சூ. குணசாந்தன் ஆகியோர் வழக்கினை நெறிப்படுத்தி இருந்தனர்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)