
posted 17th November 2023
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
சர்வதேச மாற்று திறனாளிகள் தின நிகழ்வு
சர்வதேச மாற்று திறனாளிகள் தின நிகழ்வு நேற்று (16) வியாழக்கிழமை கண்டாவளை பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.
சர்வதேச மாற்று திறனாளிகள் தினத்தை முன்னிட்டு குறித்த நிகழ்வு கண்டாவளை பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.
கண்டாவளை பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலாளர் தலைமையில் நடைபெற்ற குறித்த நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட செயலக உதவி மாவட்ட செயலாளர் க.சத்தியஜீவிதா கலந்து கொண்டிருந்தார்.
குறித்த நிகழ்வில் சமூக சேவை உத்தியோகத்தர்கள், மாற்றுத் திறனாளிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)