குற்றச்செயல்களுடன் தொடர்புடைய நான்கு சந்தேகநபர்கள் கைது

துயர் பகிர்வு

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

குற்றச்செயல்களுடன் தொடர்புடைய நான்கு சந்தேகநபர்கள் கைது

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய போதைக்கு அடிமையான இளைஞர் ஒருவரை பொலிஸார் கைது செய்தனர். அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை தொடர்ந்து மேலும் மூவர் கைது செய்யப்பட்டனர்.

புதுக்குடியிருப்பு மற்றும் அதன் அயல் பகுதிகளில் இடம்பெற்ற பல்வேறு திருட்டு சம்பவங்களுடன் கைதான இளைஞர் தொடர்புடையவர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

புதுக்குடியிருப்பு - கைவேலியை சேர்ந்த 29 வயது இளைஞரே இவ்வாறு கைதானார். அவரிடம் இருந்து 16 எரிவாயு சிலிண்டர்கள், தண்ணீர் மோட்டார், சைக்கிள், வயர்கள், கதிரைகள், தங்க நகைகள் என்பவற்றை மீட்டுள்ளனர் என்று பொலிஸார் கூறினர்.

கைதான இளைஞர் போதைப் பொருளுக்கு அடிமையானவர் என்று விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. மேலும், இவர் முதியவர்களை இருக்கும் வீடுகளை குறிவைத்து குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளார் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன், அவரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளை தொடர்ந்து மேலும் மூவரை கைது செய்ததுடன், ஓட்டோ ஒன்றும் மீட்கப்பட்டதாக புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேநபர்களை நீதிமன்றில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

குற்றச்செயல்களுடன் தொடர்புடைய நான்கு சந்தேகநபர்கள் கைது

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)