
posted 1st November 2023
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
குருளைச் சாரணர்களின் நடைபவனி
கொக்குவில் இந்து ஆரம்ப பாடசாலையின் மழலை மற்றும் குருளை சாரணர்களின் நடைபவனி மற்றும் தங்கத் தாரகை வழங்கும் நிகழ்வு பாடசாலை வளாகத்தில் சிறப்பாக இடம்பெற்றது.
பாடசாலை அதிபர் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக வடக்கு மாகாண பிரதம செயலர் சமன் பந்துலசேனவும், கௌரவ விருந்தினர்களாக வடக்கு மாகாண கல்வித் திணைக்களத்தின் பணிப்பாளர் ஜோன் குயின்ரஸ், யாழ்.மாவட்ட மேலதிக அரச அதிபரும், யாழ். மாவட்ட சாரண ஆணையாளருமான மருதலிங்கம் பிரதீபன் ஆகியோரும், சிறப்பு விருந்தினராக யாழ். கல்வி வலயப் பணிப்பாளர் ரவிச்சந்திரனும் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வில் 350 இற்கும் மேற்பட்ட சாரணர்களும் பெற்றோர்களும் கலந்துகொண்டனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)