
posted 18th November 2023
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
குருதிக் கொடையும், நினைவேந்தல் நிகழ்வும்
பருத்தித்துறை ஹாட்லியின் மைந்தர்கள் நினைவு குருதிக் கொடை முகாம் நேற்று (17) வெள்ளிக்கிழமை கல்லூரி மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.
கல்வி செயற்பாட்டின் நிமித்தம் வடமராட்சி இன்பர்சிட்டி கடற்கரை பகுதியில் 1999 ஆம் ஆண்டு நவம்பர் 17ஆம் திகதி, கடல்வள ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தவேளை கடல் அலையில் சிக்குண்டு உயிரிழந்திருந்த யாழ். ஹாட்லி கல்லூரியின் 2000ஆம் ஆண்டு உயர்தர வகுப்பு மாணவர்களான பூரணமூர்த்தி கந்தர்வன், சிவநாதன் இரவிசங்கர், சுந்தரலிங்கம் சிவோத்தமன், பாலகிருஸ்ணன் பிரதீபன் ஆகிய நான்கு பேரின் 24 ஆவது ஆண்டு, மற்றும் பேராதனை பல்கலைக் கழகத்தில் பொறியியல் பீட மாணவனாக கல்வி கற்றுவந்த வேளை புகையிரத விபத்தில் சிக்கி உயிரிழந்த மரியரட்ணம் குணரட்ணம் என்ற மாணவனது 19ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நேற்று (நவம்பர் - 17) வெள்ளிக்கிழமை (17) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து ஹாட்லியின் மைந்தர்கள் நினைவு நிதியத்தின் ஏற்பாட்டில் வருடா வருடம் முன்னெடுக்கப்பட்டு வரும் குருதிக் கொடை முகாம் நேற்று (17) காலை 09.00 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை ஹாட்லி கல்லூரி மண்டபத்தில் இடம்பெற்றது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)