
posted 7th November 2023
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
கிழக்கில் 499 அதிபர்களுக்கு நியமனம்
கிழக்கு மாகாணத்தில் அதிபர் தரம் மூன்றை நிறைவு செய்த 499 பேருக்கு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் நியமனங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
இந்த நியமனங்கள் வழங்கும் நிகழ்வு திருகோணமலை இந்துக் கலாச்சார மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன், நாடாளுமன்ற உறுப்பினர்களான கபில அத்துகோரல, அதாவுல்லா, மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் திசாநாயக்க உட்பட பலர் கலந்துக் கொண்டதாக கிழக்கு மாகாண ஆளுநர் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)