Tamil News | Thaenaaram | Obituary Notices | Advertisements |  Medical Articles |

துயர் பகிர்வு

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£1.00 Was £84.00

காவலில் இளைஞன் பலி: நான்கு பொலிஸார் கைது

வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் 25 வயதுடைய இளைஞர் சித்திரவதைக்கு உள்ளாகி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் நான்கு பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதான நால்வரையும் எதிர்வரும் டிசெம்பர் 4ஆம் திகதி திங்கட்கிழமை வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்ட நீதிவான், அன்றைய தினம் அடையாள அணிவகுப்புக்கு தயார்படுத்துமாறு சிறைச்சாலை அத்தியட்சகருக்கு கட்டளையிட்டார்.

சம்பவம் தொடர்பில் மேலும் ஓர் அதிகாரியை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

25 வயது இளைஞன் பொலிஸ் காவலில் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் ஐந்து பொலிஸ் உத்தியோகத்தர்களை கைது செய்யுமாறு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் கடந்த வெள்ளிக்கிழமை (24) உத்தரவு பிறப்பித்ததை அடுத்தே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நாகராசா அலெக்ஸ் (வயது 25) என்பவர் நவம்பர் 8ஆம் திகதி திருட்டுச் சம்பவம் ஒன்று தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸாரால் அவரின் நண்பருடன் இணைந்து கைது செய்யப்பட்டார். இவர், கடந்த நவம்பர் 12ஆம் திகதி மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்படுவதற்கு முன்னர் பொலிஸ் காவலில் இருந்தபோது கடுமையான சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டார் என்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

சம்பவம் தொடர்பில் நேற்று முன்தினம் விசாரணைகளை மேற்கொண்ட யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ. ஏ. ஆனந்தராஜா, வாக்குமூலங்கள் மற்றும் நீதிமன்றில் சமர்ப்பித்த சட்ட மருத்துவ வல்லுநரின் அறிக்கையின் அடிப்படையில் ஆட்கொலை என விளம்பல் வழங்கினார். சாட்சிகள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் முக்கிய சாட்சியின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் அதைத் தொடர்ந்து, மருத்துவ பரிசோதனை செய்யவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

சித்திரவதை குற்றச்சாட்டு எழுந்ததையடுத்து வட்டுக்கோட்டை பொலிஸ் நிலைய குற்ற விசாரணைப் பிரிவை சேர்ந்த உப பொலிஸ் பரிசோகதர் உட்பட நால்வரும் கடந்த திங்கட்கிழமை முதல் பொலிஸ் கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்தனர். அவர்கள் மீதான குற்றச்சாட்டுத் தொடர்பில் காங்கேசன்துறை பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில் யாழ்ப்பாணம் மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி, பொலிஸ் பரிசோதகர் ரி. மேனன் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் கொண்ட குழு விசாரணைகளை முன்னெடுத்தது.

அந்தக் குழுவினரினால் நேற்று முன்தினம் மாலை கைது செய்யப்பட்ட நால்வரும் நேற்று சனிக்கிழமை நண்பகல் யாழ்ப்பாணம் நீதிவான் முன்னிலையில் முற்படுத்தப்பட்டனர். நால்வரையும் விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டார். இந்த வழக்கு நாளை திங்கட்கிழமை மேலதிக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

இதனிடையே, கைதான பொலிஸார் பாதுகாப்பு நிலைமைகளை கருத்தில் கொண்டு அநுராதபுரம் சிறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

Tamil News | Thaenaaram | Obituary Notices | Advertisements |  Medical Articles |

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

மேலதிக செய்திகள் | Additional News

Tamil News | Thaenaaram | Obituary Notices | Advertisements |  Medical Articles |

Mahanadhi - மகாநதி - 16.06.2026

Read More
Tamil News | Thaenaaram | Obituary Notices | Advertisements |  Medical Articles |

Varisu - வாரிசு - 13.06.2026

Read More
Tamil News | Thaenaaram | Obituary Notices | Advertisements |  Medical Articles |

Mahanadhi - மகாநதி - 12.06.2026

Read More
Tamil News | Thaenaaram | Obituary Notices | Advertisements |  Medical Articles |

Varisu - வாரிசு - 12.06.2026

Read More