
posted 26th November 2023
பிரிந்த உறவுகளின்
துயர் பகிர்வு
கல்லூண்டாயில் நல்லிணக்கத்திற்கான இளைஞர் ஒன்றிணைவு
நல்லிணக்கத்திற்கான இளைஞர் ஒன்றிணைவு நிகழ்வு ஒன்று நேற்று சனிக்கிழமை (25) கல்லூண்டாயில் உள்ள தேசிய இளைஞர் சேவைகள் மண்டபத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்வானது SOND நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் திரு. செந்தூர்ராஜா அவர்களது தலைமையில் நடைபெற்றது.
மங்கல விளக்கேற்றி வைக்கப்பட்டு இரண்டு நிமிட அக வணக்கத்துடன் நிகழ்வு ஆரம்பமானது. அதனைத் தொடர்ந்து வரவேற்புரை, வரவேற்பு நடனம், சிவதாண்டிய நடனம், விருந்தினர்களின் உரைகள் ஆகியன இடம்பெற்றன.
பின்னர் மொழிப் பிரச்சினை தொடர்பான அளிக்கை, இன மத சார் முக்கிய சட்டங்களின் தொகுப்பு ஆகியன தொடர்பான கருத்துரைகள் வளங்கப்பட்டன. பின்னர் அமைப்பின் நோக்கம் தொடர்பான அறிக்கை செய்யப்பட்டு நன்றியுரையுடன் நிகழ்வுகள் நிறைவுக்கு வந்தன.
இந்நிகழ்வில் SOND நிறுவனத்தினர், யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் யுவதிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)