
posted 28th November 2023
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
கல்முனை நகர லயன்ஸ் கழக உதவி
கல்முனை நகர லயன்ஸ் கழகம் 25 வருட சமூக சேவை நிறைவைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் வேளையில், வெள்ளி விழா கால தலைவர் லயன் எந்திரி ம. சுதர்ஷன் தலைமையில் திருக்கோவில் பிரதேசத்தில் உள்ள காயத்திரி கிராமத்தில் பொருளாதார சவால்களை எதிர்கொள்ளும் வயது முதிர்ந்த பெண்களுக்கு 25 சேலைகளும், வறிய வயது முதிர்ந்த ஆண்களுக்கு 25 சாறன்களையும் வழங்கி வைத்தது.
திருக்கோவில் பிரதேச செயலாளர் அதற்கான தகுதியான பயனாளிகளின் பட்டியலைத் தயாரித்து வழங்கி இருந்தார்.
மேலும் திருக்கோவில் உதவி பிரதேச செயலாளர் திரு. சதிசேகரன் அவர்களும் சம்மாந்துறை வலய உதவிக் கல்விப் பணிப்பாளர் திரு. வி.டி. சகாதேவராஜா அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து சிறப்பித்திருந்தனர்.
கல்முனை நகர லயன்ஸ் கழகத்தின் முன்னாள் தலைவர் மற்றும் கிழக்கு மாகாண பேரவையின் செயலாளர் லயன் மூ. கோபாலரெட்ணம் அவர்களும் கலந்து கொண்டதுடன் விஷேட உரையொன்றையும் வழங்கினார்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)