
posted 27th November 2023
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
எவ்வித உண்மைத்தன்மையும் இல்லை
சுற்றாடல் அமைச்சராக பதவி வகித்த காலகட்டத்தில் தனக்கு பயன்படுத்த வழங்கப்பட்டிருந்த சுமார் 20 கோடி ரூபா பெறுமதியான 02 அதிசொகுசு ஜீப் வண்டிகளை அமைச்சுப்பதவியை இழந்ததை தொடர்ந்து ஜனாதிபதி செயலகத்தில் ஒப்படைத்து விட்டதாக முன்னாள் சுற்றாடல் அமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்துள்ளார்.
அமைச்சராக பதவி வகித்த போது தனக்கு பயன்படுத்தவென வழங்கப்ட்டிருந்த 02 அதி சொகுசு ஜீப் வண்டிகளை மீள் ஒப்படைக்காது தாம் பயன்படுத்துவதாக சிங்கள மொழி பத்திரிகை ஒன்றில் வெளியாகியுள்ள செய்தியில் எவ்வித உண்மைத்தன்மையும் இல்லை என்றும் முன்னாள் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் இவ்விரு ஜீப் வண்டிகளையும் ஜனாதிபதி செயலகத்திடம் தாம் கையளித்து இருப்பதாக உறுதிப்படுத்தினார். ஜனாதிபதி செயலகத்தின் சிரேஷ்ட உதவிச்செயலாளர் (போக்குவரத்து) புத்திக ஜெயதிஸ்ஸ 2023.11.02ம் திகதி எழுத்து மூலம் தனக்கு அனுப்பியிருந்தார். (ஆவணம் இணைக்கப்பட்டுள்ளது)
இது தொடர்பாக மேலதிக தகவல்களை ஜனாதிபதி செயலகத்தின் போக்குவரத்து பிரிவின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் அவர்களிடம் கேட்டறிய முடியும் என தெரிவித்தார்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)