
posted 9th November 2023
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
உரும்பிராய் சந்திக்கு அருகாமையில் கோர விபத்து
யாழ்ப்பாணம் - உரும்பிராய் சந்திக்கு அருகாமையில் (08.11.2023 ) பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
யாழ்ப்பாணம் உரும்பிராய் சந்தியில் இருந்து மருதனார்மடம் செல்லும் வீதியில் உரும்பிராய் சந்திரோதயா (ஞானபண்டிதர்) பாடசாலைக்கு அருகாமையில் நேற்று (08) புதன் மாலை 2மணியளவில் டிப்பர் மற்றும் ஹண்டர் ரக வாகனம் நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது.
குறித்த சம்பவத்தில் இரு வாகனங்களின் சாரதிகளும் படுகாயமடைந்துள்ளனர்.
இந்நிலையில் படுகாயமடைந்த சாரதிகள் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
அதேவேளை விபத்துடன் தொடர்புடைய இரு வாகனங்களும் பலத்த சேதமடைந்த நிலையில் காணப்படுவதுடன் குறித்த விபத்து காரணமாக அப் பகுதியுடனான போக்குவரத்தும் சிறிது நேரம் தடைப்பட்டது.
பாடசாலைக்கு அருகாமையிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதுடன் பாடசாலை நிறைவடைந்த நிலையில் பாடசாலை மாணவர்களுக்கு எவ்வித பாதிப்புக்களும் ஏற்படவில்லை.
அதேவேளை குறித்த விபத்து அதிவேகம் காரணமாகவே இடம்பெற்றுள்ளதாக அங்கிருந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.
இச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)