உதய சூரியன் கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கத்தின் முத்துவிழா

துயர் பகிர்வு

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

உதய சூரியன் கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கத்தின் முத்துவிழா

யாழ்ப்பாணம் வடமராட்சி வடக்கு தும்பளை கிழக்கு உதயசூரியன் கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கத்தின் முப்பதாவது ஆண்டு நிறைவு விழாவும், கூட்டுறவாளர்கள் கௌரவிப்பு நிகழ்வு இன்றைய ஞாயிறு (05) தினம் பிற்பகல் 3 மணியளவில் அதன் தலைவர் மா.மகேந்திரன் தலைமையில் இடம் பெற்றது.

இதில் முதல் நிகழ்வாக விருந்தினர்கள் வீதியில் இருந்து விழா மண்டபம் வரை மலர் மாலை அணிவித்து வரவேற்கப்பட்டனர்.

தொடர்ந்து மங்கல விளக்கினை வடமராட்சி வடக்கு கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாச தலைவர் திரு. சந்திரதாஸ், தும்பளை கிழக்கு உதயசூரியன் விளையாட்டு கழக தலைவர் செ. கேதீஸ்வரன், தும்பளை கிழக்கு கடற்கரை பிள்ளையார் ஆலய நிர்வாகத் தலைவர் மோ. விசிந்தன், உதய சூரியன் சனசமூக நிலைய தலைவர் சி. விஸ்ணிதாஸ், உதயசூரியன் மகளிர் கிராம அபிவிருத்தி சங்க தலைவி திருமதி காஞ்சனா மற்றும் பிரதிநிதிகள் ஏற்றிவைத்ததை தொடர்ந்து சங்கத்தின் கொடியினை அதன் தலைவர் மகேந்திரம் ஏற்றி வைத்தார்.

தொடர்ந்து வரவேற்புரை, வரவேற்பு நடனம் இடம் பெற்றதைத் தொடர்ந்து உதயசூரியன் கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கத்தில் கடந்த 30 ஆண்டுகளாக சிறந்த முறையிலே பணியாற்றிய தலைவர்கள், செயலாளர்கள், பொருளாளர்கள் கௌரவிக்கப்பட்டனர். தொடர்ந்து தலைவரின் தலைமை உரை இடம் பெற்றது.அதனைத்தொடர்ந்து நடனம், பேச்சு, உட்பட பல கலை நிகழ்வுகளும் இடம் பெற்றன.

தொடர்ந்து நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட வடமராட்சி வடக்கு கடத்தொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாசத்தினுடைய தலைவர் பிரதம விருந்தினர் உரை நிகழ்த்தினார்.

இந்நிகழ்வில் தும்பளை கிழக்கு கடற்றொழிலாளர் சங்கத்தின் நிர்வாகிகள், உறுப்பினர்கள், தும்பளை கிழக்கு கடற்கரை பிள்ளையார் ஆலய நிர்வாகிகள், சனசமூக நிலைய நிர்வாகிகள், உறுப்பினர்கள், உதயசூரியன் விளையாட்டு கழக நிர்வாகிகள், உறுப்பினர்கள், கிராம மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

உதய சூரியன் கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கத்தின் முத்துவிழா

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)