
posted 1st November 2023
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
இலங்கை அரசாங்க பொதுச் சேவைகள் சங்கம் நடவடிக்கை
அரச முகாமைத்து சேவை உத்தியோகத்தர் தரம் 3 க்கான வினைத்திறன் காண் தடை பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ள போதும் கிழக்கு மாகாண முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் தரம் 3 ஐ சேர்ந்த பரீட்சார்த்திகளினது பரீட்சை முடிவுகள் இதுவரை வெளியிடப்படவில்லை என கவலை தெரிவிக்கப்படுகின்றது.
மத்திய மற்றும் மாகாண அரச சேவையில் உள்ள முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் தரம் 3கான வினைத்திறன் காண் தடைதாண்டல் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டதற்கமைய 2022.11.19ந் திகதி பரீட்சை நடைபெற்றது
இதற்கு அமைய உரிய பரீட்சைப் பெறுபேறுகள் 2023.09.13ந் திகதியில் வெளியிடப்பட்டுள்ள போதும் கிழக்கு மாகாணத்தில் தரம் 3இல் உள்ள முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்களது பரீட்சை பெறுபவர்கள் இதுவரை வெளியிடப்படாதுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
மத்திய, மாகாண அரச சேவையில் உள்ளவர்களுக்கான தடை தாண்டல் பரீட்சைக்குரிய விண்ணப்பங்கள் சமகாலத்தில் கோரப்பட்டு ஏக காலத்தில் பரீட்சை நடைபெற்ற போதும் மத்திய அரசின் கீழ் பணியாற்றுகின்ற முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்களது பரீட்சை பெறுபேறுகள் 2023.09.13ந் திகதியில் வெளியிடப்பட்டுள்ளன
இந்த நிலையில் கிழக்கு மாகாண முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்களின் பரிட்சை பெறுபவர்கள் இதுவரை வெளியிடப்படாது உள்ளன .
இது குறித்து இலங்கை அரசாங்க பொதுச் சேவைகள் சங்கக்தின் பொதுச் செயலாளர் ஏ புஹாது இலங்கை பரீட்சைகள் திணைக்கள ஆணையாளருடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு வினவிய போது,
குறித்த பரீட்சைக்கான கட்டணத்தை கிழக்கு மாகாண பொதுச் சேவைகள் ஆணைக்குழு இதுவரை பரீட்சை திணைக்களத்திற்கு செலுத்தவில்லை என்றும், அக் கட்டணத்தை செலுத்துகின்ற பட்சத்தில் முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் தரம் 3க்கான தடைதாண்டல் பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதில் தாமதம் இல்லை எனவும் தெரிவித்தார்
இது குறித்து கிழக்கு மாகாண பொது சேவை ஆணைக்குழுவின் பதில் செயலாளர் ஏ மன்சூருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வினவிய போது,
கிழக்கு மாகாண பொது சேவை ஆணைக்குழுவின் செயலாளராக அண்மையில் தான் கடமையேற்றுக் கொண்டதாகவும், இது தொடர்பாக விசாரித்தறிந்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
இது குறித்து இலங்கை அரசாங்க பொதுச் சேவைகள் சங்கம் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கு அவசர கடிதம் ஒன்றை 2023.10.30ந் திகதி மாலை அனுப்பி வைத்துள்ளதாக இலங்கை அரசாங்க பொதுச் சேவைகள் சங்கத்தின் ஊடக பேச்சாளரும் ஸ்தாபகத் தலைவருமான க. நடராஜா தெரிவித்துள்ளார்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)