
posted 29th November 2023
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
இரு புதிய அமைச்சர்கள்
ஜனாதிபதி ரணில் விக்கிரம சிங்க இரு புதிய அமைச்சர்களை நேற்று முன்தினம் (27) மாலை நியமனம் செய்துள்ளார்.
இதன்படி நீர்ப்பாசன அமைச்சராக பவித்ரா வன்னியாரச்சியும், இளைஞர் விவகார விளையாட்டுத்துறை அமைச்சராக ஹரின் பெர்னாண்டோவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர். இதேவேளை விளையாட்டுத்துறை இளைஞர் விவகாரம் மற்றும் நீர்ப்பாசன அமைச்சராக பதவியில் இருந்து வந்த ரொஷான் ரண சிங்கவை ஜனாதிபதி அமைச்சுப் பதவியிலிருந்து நீக்கியுள்ளார்.
இலங்கை அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இவரது அமைச்சுப் பதவி நீக்கம் தொடர்பில் ரொஷான் ரண சிங்க கருத்து வெளியிடுகையில் ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் திருடர்கள் வெற்றியடைந்து விட்டனர் வாக்கு வீதத்தில் நான் 10ஆவது இடத்தில் இருக்கும் போது என்னை பதவி நீக்குவதற்கு ஜனாதிபதிக்கு என்ன தார்மீக உரிமை இருக்கின்றது என்பது புரியவில்லை எனத் தெரிவித்தார்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)