
posted 12th November 2023
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
இன மத ஐக்கியத்திற்கான பூஜை வழிபாடு
இன மத ஐக்கியத்திற்கான பூஜை வழிபாடு இன்றைய தினம் (12) ஞாயிற்றுக் கிழமை தீபாவளி தினத்தன்று நல்லூர் சிவன் ஆலயத்தில் சிறப்பாக இடம் பெற்றது.
தேசிய இன நல்லிணக்கத்துக்கான அதிகார சபையின் தலைவர் கந்தையா கருணாகரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் இன மத ஐக்கியதுக்கான பொங்கல் இடம்பெற்றதுடன் விசேட யாகம் வளர்க்கப்பட்டது.
இந்நிகழ்வில் யாழ்ப்பாண மாநகர சபை ஆணையாளர் ஜெயசீலன், தொழிலதிபர் இ.எஸ்.பி. நாகரத்தினம், யாழ்ப்பாண பல்கலைக்கழக பேராசிரியர் வேல் நம்பி, யாழ்ப்பாண பிரதான பொலிஸ் பரிசோதகர் மற்றும் பிரதேச பொலிஸ் நிலையங்களின் பொறுப்பு அதிகாரிகள் இராணுவ உயர் அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் நாயன்மார்க்கட்டு எஸ் ஓ.எஸ்.கிராம பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்வுகளும் இடம் பெற்றன. அத்துடன் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டன.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)