இந்திய வங்கியை திறந்தார் இந்திய நிதி அமைச்சர்

துயர் பகிர்

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

இந்திய வங்கியை திறந்தார் இந்திய நிதி அமைச்சர்

இந்திய அரச வங்கி (ஸ்டேட் பாங் ஒவ் இந்தியா) கிளையை திருகோணமலையில் இந்திய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் திறந்து வைத்தார்.

கிழக்கு மாகாண ஆளுனரும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவருமான செந்தில் தொண்டமானின் அழைப்பின் பேரில் கிழக்கு மாகாணத்துக்கு இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பயணம் மேற்கொண்டார். கிழக்கு ஆளுநரின் ஏற்பாட்டில் இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் முதல் நிகழ்வாக திருக்கோணேச்சரம் ஆலயத்தில் பூசை வழிபாடுகளில் கலந்துகொண்டார்.

இதனை தொடர்ந்து இந்திய அரச வங்கியை நிதியமைச்சர் உத்தியோகபூர்வமாக திறந்து வைத்தார்.

இந்த நிகழ்வின்போது ஆளுநருக்கு வங்கியில் முதல் கணக்கு திறக்கப்பட்டு இந்திய அமைச்சர் சீதாராமனால் வங்கி கணக்குப்புத்தகம் வழங்கப்பட்டது. அத்துடன் ஆளுநரால் நிதியமைச்சருக்கு நிணைவுச் சின்னமும் வழங்கப்பட்டது.

தொடர்ந்து திருகோணமலையில் உள்ள இந்திய ஓயில் கூட்டுத்தாபனத்தையும் அமைச்சர் பார்வையிட்டார்.

இந்த நிகழ்வில் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய,இந்திய தூதுவர் கோபால் பக்லே, ஆளுநரின் செயலாளர் எல்.பி. மதநாயக்க, ஆளுநரின் பிரத்தியேக செயலாளர் எல்.எல். அனில் விஜயஶ்ரீ, அரச அதிபர் மற்றும் அமைச்சின் செயலாளர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

இந்திய வங்கியை திறந்தார் இந்திய நிதி அமைச்சர்

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)